தளபதி 68 படத்தில் இதனை சண்டை காட்சிகளா? வெளியான தெறிக்கவிடும் அப்டேட்!

தென்னிந்திய திரை உலகின் அழகிய தமிழ் மகனாக வலம் வரும் தளபதி விஜய் தனது 68 வது திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தை தொடர்ந்து தளபதி 68 திரைப்படத்தின் பூஜை மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த பிரம்மாண்ட தொடக்க பூஜை வீடியோ கடந்த சில வாரங்களின் முன் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்பொழுது ரசிகர்களிடையே அதிகரிக்க தொடங்கியுள்ளது.

பிரசாந்த் ஸ்டூடியோவில் நடைபெற்ற பூஜையை தொடர்ந்து படத்தின் முதல் பாடல் காட்சி படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் காட்சியில் தளபதி விஜய், நடிகர் பிரசாந்த், நடிகர் பிரபுதேவா, நடிகர் அஜ்மல் என நான்கு முக்கிய நடிகர்கள் இணைந்து நடனம் ஆடியுள்ளனர். இதைத்தொடர்ந்து படக்குழு சவுத் ஆப்பிரிக்கா மற்றும் தாய்லாந்து சென்றுள்ளது. அங்கு மிகப்பெரிய சண்டைக் காட்சி ஒன்றை படமாக்கப்பட்டு முடிந்துள்ளதாகவும் அதில் நடிகர் மைக் மோகன் மட்டும் கலந்துள்ளதாகவும் சமீபத்திய தகவல் வெளியாகியிருந்தது.

தாய்லாந்து சூட்டிங் முடித்து திரும்பிய தளபதி விஜய், இயக்குனர் வெங்கட் பிரபுவை அழைத்து அடுத்தடுத்த படப்பிடிப்புகளை மிக விரைவில் எடுக்கும்படி கூறியுள்ளார். அதன்படி தாய்லாந்தில் இருந்து திரும்பிய படக்குழு இரண்டு நாள் மட்டுமே விடுமுறை எடுத்து தற்போது மீண்டும் படப்பிடிப்பில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி தளபதி 68 இன் படப்பிடிப்பு தற்பொழுது சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. 6 நாட்கள் மேல் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் பெரும்பான்மையான நட்சத்திரங்கள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பெரிய எதிர்பார்ப்பில் உருவாகும் தளபதி 68 திரைப்படத்தில் ஆறு பிரம்மாண்ட சண்டை காட்சிகள் இருப்பதாக பிரபல திரைவிமர்சகர் ஒருவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்த வகையில் முதல் சண்டை காட்சி சவுத் ஆப்பிரிக்கா மற்றும் தாய்லாந்து பகுதியில் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து சண்டை காட்சிகள் பல வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தளபதி 68 படத்தின் அடுத்தடுத்த சண்டைக் காட்சிகள் ஹைதராபாத், இஸ்தான்புல், ஜப்பான், டோக்கியோ போன்ற பெரிய நகரங்களில் மிகப்பிரமாண்டமாக எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ரிலீசுக்கு முன்பே 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த விடாமுயற்சி திரைப்படம்!

முதலில் இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் அனைத்தையும் முடித்துவிட்டு அதன் பிறகு மற்ற காட்சிகளை படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளது. மேலும் இந்த படத்தில் தளபதி விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் அதில் ஒரு வில்லன் ரோலில் வெறித்தனமான நடிப்பை தளபதி விஜய் வெளிக்காட்ட உள்ளதாகவும் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் அமையும் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை தெறிக்கவிடும் விதத்தில் உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews