லியோக்கு போட்டியாக தளபதி 68வது படத்தை வாங்கிய பிரபல ஓடிடி நிறுவனம்!

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி ஹீரோவாகவும், புகழின் உச்சம் தொட்ட பிரம்மாண்ட ஹீரோவாகவும் வலம் வருபவர் தளபதி விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் ப்ரோமோஷன் பணிகள் தற்பொழுது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த மாதம் 19ஆம் தேதி பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மல்டி ஸ்டார் படமாக உருவாகியுள்ள லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து இந்த படத்தில் பல பிரம்மாண்ட நடிகர்கள், இயக்குனர்கள் என பலர் நடித்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளனர். இந்த படத்தில் இருந்து நான் ரெடி என்னும் முதல் சிங்கள் வெளியானதை தொடர்ந்து அடுத்த சிங்கிள் மிக விரைவில் வெளியாகும் என இசையமைப்பாளர் அனிருத் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் லியோ படத்தின் வெளியிட்டு முன்பாகவே விஜயின் அடுத்த படமான தளபதி 68 படத்தின் அப்டேட்கள் வரத் தொடங்கியுள்ளது. தளபதி விஜய் தனது 68வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து நடிக்க உள்ளார்.

மேலும் இந்த படத்தில் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், அதனால் இரண்டு ஹீரோயின்கள் தேர்வு செய்யும் பணியில் தற்பொழுது வெங்கட் பிரபு ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் மகன் விஜய்க்கு பிரியங்கா மோகன் ஜோடி சேர உள்ளதாகவும் அப்பா விஜய்க்கு சினேகா மற்றும் சிம்ரன் போன்ற முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியானது.

மேலும் இந்த படத்தில் விஜய்க்கு தம்பியாக ஜெய் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த படத்தின் பூஜை லியோ ரிலீஸ்க்கு பின் நடக்க உள்ளதாகவும், அதைத்தொடர்ந்து விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தவும் படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கமல் படத்தில் ஓகே சொல்லி… ரஜினி படத்திற்கு நோ சொல்லும் ஃபகத் பாசில்!

தளபதி விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் இந்த படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் தளபதி 68 படம் ஒரு வித்தியாசமான கதைக்களம் கொண்டதாகவும், திரில்லர் ஆக்சன் திரைப்படமாக உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது தளபதி 68 படம் குறித்த மாஸான ஒரு தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது தளபதி 68 படத்தை பிரபல ஓ டி டி நிறுவனமான நெட் பிளக் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுவும் 150 கோடிக்கு இந்த படத்தை வாங்கியுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. மேலும் இது லியோ படத்தை விட அதிகம் எனவும் கூறப்படுகிறது. லியோ படத்தை 125 கோடிக்கு மட்டுமே வாங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...