தளபதி 68 படத்தில் கிச்சா சுதீப் நடிக்கிறாரா? வைரலாக வலம் வரும் ஃபேக் ஐடி!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா, பிரேம்ஜி உள்ளிட்ட வெங்கட் பிரபு டீம் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 68 படத்தின் டைட்டில் மட்டும் பஸ்ட் லுக் புத்தாண்டை முன்னிட்டு வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாடு படத்திற்கு பிறகு வெங்கட் பிரபுக்கு விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் மாநாடு படத்தை போலவே வித்தியாசமாக சயின்ஸ் பிக்சன் எல்லாம் கதையில் கொண்டு வந்து தளபதி 68 படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு.

தளபதி 68ல் கிச்சா சுதீப் நடிக்கிறாரா?

இந்நிலையில் அந்த படத்தில், வில்லனாக பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் இணைந்துள்ளதாக அவரது பெயரில் உள்ள ட்விட்டர் கணக்கில் இருந்து ட்வீட் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் கிச்சா சுதீப் இணைந்து எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்றும் நடிகர் விஜயுடன் ஹிஜாஸ் உதிப்பு எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டு தளபதி 68 படத்தில் இணைந்தது மிக்க மகிழ்ச்சியான பதிவிட்டது போல இருக்கும் ட்வீட்டை பார்த்த விஜய் ரசிகர்களே கன்பியூஸ் ஆகிவிட்டனர். ஏற்கனவே புலி படத்தில் விஜய்க்கு வில்லனாக கிச்சா சுதீப் நடித்துள்ள நிலையில், மீண்டும் விஜய்யுடன் நடிக்கிறாரா என்கிற சந்தேகம் எழுந்தது.

ஃபேக் ஐடி:

ஆனால், அந்த கணக்கே கிச்சா சுதீப்பின் ஒரிஜினல் ஐடி இல்லை என்பத குறிப்பிடத்தக்கது. ஃபேக் ஐடியை வைத்துக்கொண்டு யாரோ ஒருவர் விஜய் படத்தில் கிச்சா சுதீப் இணைந்து விட்டார் எனக் கொளுத்தி போட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படங்களில்தான் பக்கத்து மாநில நடிகர்கள் பலர் இணைந்து நடித்து வருகின்றனர். இந்நிலையில், விஜய் படத்திலும் அப்படி மற்ற மொழி நடிகர்கள் நடிப்பதாக கிளப்பிவிட்டது ரஜினி ரசிகர்கள் தான் என சமூக வலைதளங்களில் சண்டையும் ஆரம்பித்துள்ளது.

ஏற்கனவே தளபதி 68 படத்தில் எக்கச்சக்க மல்டி ஸ்டாரர்கள் நடித்து வரும் நிலையில், புதிதாக மற்ற மாநில நடிகர்கள் இணைவார்களா என்பது கேள்விக்குறிதான் என்றும் கூறுகின்றனர். பிரசாந்த் மற்றும் மைக் மோகன் தான் மெயின் வில்லனாகவே இருப்பார்கள் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. லியோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தளபதி 68 படத்தை ஃபேமிலி மற்றும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமாக வெங்கட் பிரபு உருவாக்கி வருகிறார் என்றும் கூறுகின்றனர். அடுத்த ஆண்டு சம்மருக்கு படம் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.