தலைவர் 170 டைட்டில் நாளை ரிலீஸ்!.. சூப்பர்ஸ்டார் பிறந்தநாளில் ரசிகர்கள் தரமான ட்ரீட் காத்திருக்கு!..

சூப்பர்ஸ்டார் என உலகளவில் உள்ள தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் ரஜினிகாந்த் நாளை தனது 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சிவாஜிராவ் கெய்க்வாட்டாக கர்நாடகாவில் கன்டக்டராக இருந்தவர் மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பிக்க அங்கிருந்து சினிமா வாய்ப்புத் தேடி சென்னை வந்தார்.

நடிகர் ரஜினிகாந்திற்குள் இருக்கும் அசாத்திய திறமையை பார்த்து கே. பாலசந்தர் தனது படங்களில் நடிக்க வைத்தார். பைரவி படத்தில் அறிமுகமான ரஜினிகாந்த் ஹீரோவாகவும், வில்லனாகவும் கமல்ஹாசன் உடன் இணைந்தும் நடித்து வந்தார்.

ரஜினிகாந்தின் 73வது பிறந்தநாள்

ரஜினிக்கு முன்பே மிகப்பெரிய நட்சத்திரமாக கமல்ஹாசன் இருந்தாலும், இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காரணமாக இனிமேல் இணைந்து நடிக்க வேண்டாம், தனித்தனியாக நடித்து இருவரும் பெரிய நடிகர்கள் ஆவோம் என போட்டிப் போட்டு நடிக்க ஆரம்பித்தனர்.

கமல்ஹாசன் நடிப்பில் ஒரு பக்கம் அசத்த, மறுபக்கம் ரஜினிகாந்த் தனது ஸ்டைலில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர்ஸ்டாராக மாறினார்.

73 வயதிலும் லால் சலாம், தலைவர் 170, தலைவர் 171 என வரிசையாக படங்களை கைவசம் வைத்திருக்கும் இவரை போல ஒரு நடிகர் இந்தியாவிலேயே இருக்க மாட்டார்கள் எனக் கூறுகின்றனர். பல முன்னணி நடிகர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக விளங்கி வரும் ரஜினிகாந்த் அடுத்ததாக தலைவர் 170 படத்தில் நடித்து வரும் நிலையில், நாளை ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷல் அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனமான லைகா தற்போது அறிவித்துள்ளது.

தலைவர் 170 டைட்டில் ரிலீஸ்

இந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்திய நிலையில், அடுத்ததாக வெளியாக தலைவர் 170 படத்தின் மூலம் லைகா பெத்த லாபத்தை அடைய போவது உறுதியாகி உள்ளது.

அந்த படத்தில் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்ற்னர்.

ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் அந்த படத்தின் டைட்டில் நாளை மாலை 5மணிக்கு வெளியாகும் என்கிற அசத்தலான அப்டேட் தான் தற்போது வெளியாகி உள்ளது. மேலும், ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு வீடியோ ஒன்றையும் லைகா வெளியிட திட்டமிட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.