தடைப்பட்ட மங்களங்கள் அனைத்தும் உடனே ஈடேற மகா சண்டி மந்திரம்…

மங்களங்கள் பலவற்றை அள்ளித்தரும் மங்கள சண்டிகா மந்திரம். இதை நாள்தோறும் சொல்லி வழிபட்டு வந்தால் மங்களங்கள் அனைத்தும் இல்லத்தில் நடைப்பெறும்.

1e1392b1e7d8994b694b006d0103d270

ட்ச ரட்ச ஜகன்மாதா: தேவி மங்கள சண்டிகே
ஹாரிகே விபதாம் ராசே ஹர்ஷ மங்கள காரிகே
ஹர்ஷ மங்கள தட்ச ஹர்ஷ மங்கள தாயிகேசுபே மங்கள தசேக்ஷ சுபே மங்கள சண்டிகே

மங்களே மங்களார்ஹேச ஸர்வ மங்கள மங்களே
ஸதாம் மங்களதே தேவி ஸர்வேஷாம் மங்களாலயே
பூஜ்யே மங்கள வாரேச மங்களா பீஷ்ட தேவதே
பூஜ்யே மங்கள பூபஸ்ய மனுவம்சஸ்ய ஸந்தகம்
மங்களா திஷ்டாத்ரு தேவி மங்களானாம் சு மங்களே
ஸம்ஸார மங்களாதாரே மோக்ஷ மங்கள தாயினி
ஸாரேச மங்களாதாரே பாரேச ஸர்வ கர்மணாம்
ப்ரதி மங்கள வாரேச பூஜ்யே மங்கள ஸுகப்ரதே

0f38f951031737e2ddab29042e83ab87

பொருள்: இந்த உலகத்தைக் காத்து அருள்கின்ற தாயே, ஆபத்துகள் வராமல் காத்து நிற்பவளே, ஆபத்துக்கள் வந்தாலும் அதை அகற்றுபவளே! மங்கள தினமான செவ்வாய்க்கிழமை தோறும் வணங்கத்தக்க மங்கள உருவானவளே! இந்த உலகின் மங்களத்திற்கு மூலகாரணமாய் விளங்குபவளே! எல்லா நிலைகளிலும் மங்களத்தைத் தருபவளே! புண்ணியம், பாவம் ஆகியவற்றைக் கடந்து நிற்பவளே! ஒவ்வொரு மங்கள வாரத்திலும் எனக்கு எல்லாவிதமான மங்களத்தையும் அளித்துக் காத்து அருள்வாய்!!

சொல்லும் முறை:

செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமைகள் பொதுவாக தேவி வழிபாட்டிற்குரிய உகந்த தினமாகும். ஒவ்வொரு செவ்வாய்கிழமைகளிலும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும், பூஜையறையில் அம்பாள் படத்திற்கு முன்பு தீபமேற்றி, மலர்களை சமர்ப்பித்து, ஏதேனும் பழத்தை நைவேத்தியமாக வைத்து இந்த மந்திரத்தினைஉளமார படிப்பதால் குழந்தை பேறில்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். வீட்டில் எப்போதும் மங்களங்கள் நிறைந்திருக்கும். சகல சம்பத்துகளும் பெருகிக்கொண்டே செல்லும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.