பொழுதுபோக்கு

நாங்க போட்டியும் இல்ல.. ஆதரவும் இல்ல.. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கடந்த பிப்ரவரி மாதம் யாரும் எதிர்பார்க்காத வேளையில் திடீரென அரசியலில் குதித்து தனது கட்சிப் பெயரை அறிவித்தார் நடிகர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது கட்சியின் நிறுவனத் தலைவராக தற்போது இருக்கிறார் விஜய். ஏற்கனவே செயல்பட்டு வந்த விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வந்த அனைத்து நலத்திட்டப் பணிகளும் தற்போது தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு விருகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கடைசிவரை விஜய் மௌனம் காத்து 2026 சட்டமன்றத் தேர்தலே எங்கள் இலக்கு என தெளிவாகச் சொல்லி தேர்தலிலும் போட்டியிடவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் திடீரென விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி காலமானதைத் தொடர்ந்து அந்தத் தொகுதி காலியாக உள்ளது என அறிவிக்கப்பட்டது. பின்னர் இடைத்தேர்தல் தேதியும் ஜுலை 10 அன்று நடைபெறும் என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அதிமுக இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்து விட்டது. இதற்கு பா.ஜ.கவின் அழுத்தம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. இவ்வாறு இருக்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் வருகிற ஜுலை 10-ல் நடைபெற உள்ள இடைதேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடப் போவதில்லை எனவும், மேலும் எந்தக் கட்சிக்கும் ஆதரவும் இல்லை எனவும் விஜய்யின் அறிவுறுத்தலின் பேரில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

வேண்டுதலுக்காக முடியைத் தியாகம் செய்த பிரபல நடிகை.. அலகு குத்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றம்

விரைவில் கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள், செயல்திட்டங்களை தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் வெளியிட்டு அதன் தொடர்ச்சியாக கழக உட்கட்டமைப்பு சார்ந்த பணிகள், தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்புப் பயணங்கள் என 2026-ம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு அதன்பின் போட்டியிட்டு வெற்றி பெறுவதே தமிழக வெற்றிக் கழகத்தின் இலக்கு என்றும், அதுவரை எந்தத் தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Published by
John

Recent Posts