வரி கட்ட விலக்கு வாங்க நடிகர் சொன்ன பகீர் ஐடியா… ஒரு கனம் அதிர்ந்து போன இயக்குநர்!

பழம்பெரும் நடிகர் டனால் தங்கவேலுவைப் பற்றி அறிமுகம் தேவையில்லை. தனது அசாத்திய காமெடியால் எதிரில் நடிப்பவரையும் மிஞ்சி விடுவார்.  நாகேஷ் திரைக்கு வருவதற்கு முன்பாக சந்திரபாபு, தங்கவேலு ஆகிய இருவரும் காமெடியில் கொடிகட்டிப் பறந்த காலகட்டம் அது. அப்போது தங்கவேலு அதிகமான சம்பளம் பெறும் காமெடி நடிகராகத் திகழ்ந்தார்.

ஒருமுறை இயக்குநர் திருலோகச்சந்தரும், தங்கவேலுவும் பேசிக் கொண்டிருக்கும் போது நடந்த சம்பவம் இது.

டணால் தங்கவேலு ஒரு படப்பிடிப்பின்போது முக்கிய வேடத்தில் நடித்துக் கொண்டு இருந்த சமயம். நிறைய சம்பாதித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு வருமானத்துக்குத் தக்கபடி வரி போட்டு இருக்கிறார்கள். அவர் உழைப்பில் சம்பாதித்ததற்கு அரசாங்கம் வரி போட்டுப் பிடுங்குவது அவருக்குப் பிடிக்கவில்லை. மிகக் கோபத்தில் இருந்தார்.

பாக்ஸிங் போட வந்தவருக்கு எம்.ஜி.ஆர். வைத்த ராஜ விருந்து…முகமது அலி vs எம்.ஜி.ஆர் சந்திப்பு

அப்போது அவர் இயக்குநர் திருலோகச் சந்தரிடம், “நீங்கள்லாம் படிச்சவங்க தானே. இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்கக்கூடாதா? என்று கட்டபொம்மன் ஸ்டைலில் வசனம் பேசினார். அவர்கள் என்ன அரிதாரம் பூசினார்களா? வசனம் பேசினார்களா? கேமரா முன் விளக்கு வெளிச்சத்தின் கொடுமையைத் தாங்கிக் கொண்டு நின்றார்களா? நான் ஏன் கட்ட வேண்டும் வருமான வரி..?“ என்று ஏகத்துக்கும் கேள்வி கேட்டார்.

அப்போது திருலோகச் சந்தர் தங்கவேலுவுக்கு புரியும்படி, “அணை கட்டுவதில் இருந்து ரோடு போடுவது வரை அரசே பணம் செலவழிக்கிறது. அதற்கு ஒவ்வொரு மந்திரியும் தன் கையில் இருந்தா கொடுக்க முடியும்? பொதுத் தொண்டுகள் செய்ய, பணம் தேவைப்படுமே. அதனால் தான் தேவைக்கு அதிகமாக சம்பாதிப்பவர்களிடம் இருந்து அரசாங்கம் ஒரு பகுதியைக் கேட்டு வாங்கிக்கிறது. இல்லை என்றால் அரசு நடத்த அரசாங்கம் பணத்திற்கு என்ன செய்யும்?” என்றாராம்.

ஏ.ஆர்.ரஹ்மானை விட குறைந்த வயதில் இசையமைப்பாளராக மாறிய பிரபலம்.. யேசுதாஸை அறிமுகப்படுத்திய ஜாம்பவான்

அப்போது ஒரு குண்டைத் தூக்கிப்போட்டிருக்கிறார் தங்கவேலு. “அதற்கு நான் ஒரு நல்ல ஐடியா வைத்திருக்கிறேன். கேளுங்கள். பணத்திற்கு வழி சொல்கிறேன். அப்போது பெரிய 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.

இந்து, தினமணி,ஈ தினத்தந்தி, சுதேசமித்திரன் போன்ற பேப்பர்கள் அச்சிடுவதை 2 மாசம் நிறுத்தி விட்டு அந்த பேப்பர்ல ஈசியா 50 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சடித்து விடலாமே… எவ்வளவோ காகிதம் கிடைக்கும். அரசு அச்சிட்டு செலவிடலாமே… ஏன் நம் ரத்தத்தை உறிஞ்ச வேண்டும்?“ என்றாராம்.

அதிர்ச்சி அடைந்த திருலோகச்சந்தர் இப்படிப்பட்ட நல்ல ஐடியா உள்ளவரை நாம் சமாதானப்படுத்த முடியாது என்பதை உணர்ந்து நைசாக அங்கிருந்து வெளியேறி இருக்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews