தமிழகத்தின் முதல் பெண் ஓதுவார்

a60e2d7eb598941891ce759c5b3d7c73

சிவன் கோவில்களில் தேவாரம் திருவாசகம் பாடுவதற்காக ஆண் ஓதுவார்கள் உண்டு. தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆன திமுக ஆட்சியில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அடிப்படையில் பலருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது. பெண் ஒருவரை ஓதுவாராக நியமித்து தமிழக அரசு சிறப்பித்துள்ளது.

சென்னையை அடுத்துள்ள தாம்பரம் அருகே உள்ளது மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவில் இங்குதான் இந்த பெண் ஓதுவார் நியமிக்கப்பட்டுள்ளார். 28வயதான இவரின் பெயர் சுஹாஞ்சனா

முதல்-அமைச்சரிடம் இருந்து பணி நியமன ஆணையை பெற்ற அவர், நேற்று மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் தனது ஓதுவார் பணியை தொடங்கினார்.

தாம்பரம் அடுத்த சேலையூர் ஐ.ஏ.எப். சாலையில் கணவர் கோபிநாத், மகள் வன்ஷிகாசக்தி, மாமனார் பரமசிவம், மாமியார் லட்சுமி ஆகியோருடன் இவர் வசித்து வருகிறார்

இவரது சொந்த ஊர் கரூர் அருகே உள்ள வேலாயுதம்பாளையம் ஆகும். இவர் 10ம் வகுப்பு முடித்த பின்னர் தேவாரம் பாடுவதில் ஆர்வம் கொண்டாராம் இதற்காக இசைப்பள்ளியில் படித்து கொண்டிருக்கும்போது அதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருக்கிறார்

 இந்த பணியை வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி என இவர் தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews