ஏவிஎம் லோகோ மியூசிக் இவரோடதா.. நடிகர் திலகம், உலக நாயகன் அறிமுகமான படங்களுக்கு ஹிட் பாடல் போட்ட இசையமைப்பாளர்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் படமான பராசக்தி, உலக நாயகன் கமல்ஹாசனின் முதல் படமான களத்தூர் கண்ணம்மா, பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலாவின் முதல் படமான வாழ்க்கை இந்த மூன்று படங்களுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இந்த மூன்று படங்களுக்கும் இசையமைத்தவர் ஒரே இசையமைப்பாளர் தான்.

நடிகர் திலகத்துக்கு பராசக்தியில் கா..கா..கா.. பாடல், ஓ ரசிக்கும் சீமானே, புது பெண்ணின் மனதைத் தொட்டு போறவரே போன்ற காலத்தால் அழியாத சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்தார்.

அடுத்ததாக களத்தூர் கண்ணம்மா படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பாடும் அம்மாவும் நீயே.. அப்பாவும் நீயே.. பாடலை எந்தக் காலத்திலும் மறக்க முடியாது. இப்படி கமல்ஹாசனுக்கும் சூப்பர் ஹிட் பாடலால் நல்ல அறிமுகத்தைக் கொடுத்தார்.

மூன்றாவதாக வைஜெயந்தி மாலா அறிமுகமான வாழ்க்கை படத்திலும் இவர்தான் இசை. இவ்வாறு தமிழ் சினிமாவின் மூன்று பெரிய நட்சத்திரங்களின் முதல் படத்தில் தன்னுடைய இசையால் அவர்களுக்கு சூப்பர் ஹிட் பாடல்களை வழங்கினார் சுதர்சனம்.

பெரிய ஸ்டாருக்கான அறிகுறியில் கவின்.. ஸ்டார் படத்தின் டிரைலர் எப்படி இருக்கு?

ராமகிருஷ்ண சுதர்சனம் என்ற ஆர். சுதர்சனம் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, சிங்களப் படங்களுக்கும் இசைமைத்துள்ளார். 1939-ல் திருநீலகண்டர் என்ற படத்தின் மூலம் சினிமா இசையுலகில் அறிமுகமாகி பின் சாகுந்தலை என்ற படத்திலும் இசையமைத்தார். ஆனால் இவருக்குரிய அங்கீகாரம் அப்போது கிடைக்கவில்லை.

இதன் பின் 1945-ல் ஏ.வி.எம் தயாரிப்பில் வெளிவந்த ஸ்ரீவள்ளி படத்தில் மற்றொரு இசையமைப்பாளருடன் இணைந்து பணியாற்றினார். இதன்பின் நாம் இருவர் என்ற படத்தில் முழுநேர இசையமைப்பாளராக அறியத் தொடங்கினார். இந்தப் படத்தில் இடம்பெற்ற ஆடுவோமோ பள்ளு பாடுவோமே என்ற மகாகவியின் பாடல்கள் அப்போது மிகப் பிரபலம் ஆனது.

திலகம் என்ற படத்தில் வரும் பாடலான B..O..Y பாய்ன்னா பையன் என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் இன்றும் ஒலிக்கும் பாடலாக விளங்குகிறது. ஏ.வி.எம்-ன் புகழ்பெற்ற லேகோவுடன் வரும் இசையினை இன்றும் நாம் யாரும் மறந்திருக்க முடியாது. அந்த இசையும் இவருடையதே.. இப்படி தமிழ் சினிமாவில் எண்ணற்ற ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் உச்சமாக டி.எம்.சௌந்தர்ராஜன், எஸ்.ஜானகி போன்ற புகழ்பெற்ற பாடகர்களையும் தனது இசை வாயிலாக அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவராகவும் விளங்குகிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...