போதையில் வந்த உச்ச நடிகர்… சவுக்கால் அடித்து விரட்டிய தயாரிப்பாளர், யார் தெரியுமா?

சினிமாக்களில் ஒரு நாயகனே இரட்டை வேடங்களில் தோன்றி ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தைக் கொடுத்த நடிகர்கள் ஏராளம். அதுவும் எம்.ஜி.ஆர், சிவாஜி முதல் இப்போது இருக்கும் சிம்பு வரை இரட்டைக் கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினர். ஆனால் முதன் முதலில் தமிழ் சினிமாவில் இரண்டு வேடங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் பி.யூ.சின்னப்பா.

புதுக்கோட்டையைச் சேர்ந்த இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி காலகட்டத்திற்கு முன்தமிழ் சினிமாவின் செல்வாக்கு மிக்க நடிகராகத்  திகழ்ந்தார். வறுமை காரணமாக கயிறு திரிக்கும் வேலைக்குச் சென்றுபின்னர் நடிப்பின் மீது கொண்ட ஆசையால் நாடக சபாக்களில் வாய்ப்பு பெற்று பின்னாளில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்தார்.

Chinnappa 1

வாள் சண்டை, சிலம்பம் போன்றவற்றில் மிகுந்த தேர்ச்சி பெற்ற பி.யூ.சின்னப்பா உத்தமபுத்திரன், ஜகதலப்பிரதாபன், கண்ணகி, ஆர்யமாலா போன்ற படங்களில் நடித்து பெரும்புகழ் பெற்றார். இதில் உத்தமபுத்திரன் படம்தான் இரட்டை வேடங்களில் அவர் தோன்றியது. தமிழின் முதல் இரட்டை வேட சினிமாவான உத்தமபுத்திரன் திரைப்படத்தில் அப்போதைய தொழில்நுட்ப உதவிகளைக் கொண்டு இருவரும் வரும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.

தயாரிப்பாளர்களின் ஹீரோ இவர்தானா? சம்பளத்தை கண்டுக்கவே மாட்டராமே..!

இப்படத்தின் மூலமாக தியாகராஜ பாகவதருக்கு கடும்போட்டியை உருவாக்கினார். அப்போதிருந்தே யார் சூப்பர் ஸ்டார் என்ற மோதல் வலுக்கத் துவங்கியது தற்போது வரை நடந்து கொண்டிருக்கிறது. தான் சம்பாதித்த பணத்தில் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் நிறைய வீடுகளை வாங்கியதால், புதுக்கோட்டை அரசர், இவருக்கு அவ்வூரினர் யாரும் வீடுவிற்க தடைவிதித்ததாக செவிவழித் தகவல் உண்டு.

“இந்திரஜித்” படத்தில் நடித்த இவர், குடிபோதையில் மூழ்கி நடிக்க வராமல் தாமதிக்க, படத் தயாரிப்பாளர் டி.ஆர்.சுந்தரம், இவரைச் சவுக்காலடித்து, படத்திலிருந்து நீக்கிவிட்டு, தானே நாயகனாக நடித்தார். படம் படுதோல்வியடைந்தது. ஆனாலும், அது குறித்து, டி.ஆர்.சுந்தரம் கவலைப்படவில்லை.

பி.யூ.சின்னப்பா தனது திரையுலக மார்க்கெட் பிரபலமாக இருந்த காலத்திலேயே மது, புகை பழக்கம், வரைமுறையற்ற அசைவ உணவுப் பழக்கங்களால் உடல் பருமனாக்கிக் கெடுத்துக் கொண்டார். அதன் விளைவாக இளம் வயதிலேயே அதாவது 35 வயதிலேயே இவ்வுலக வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்தார். பிருத்விராஜ் படத்தில் நடித்த போது சகுந்தலாவைக் காதலித்து திருமணமும் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews