திருமணத்துக்கு தயாராகும் தமன்னா!! யார் அந்த லக்கி மேன்?

தமிழில் தமன்னாவுக்கு என்று பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதுவும் சமீபத்தில் வெளியான காவாலா பாடலுக்கு அவர் ஆடிய நடனம் புதிய ரசிகர்களையும் கொடுத்திருக்கிறது.

அந்த பாடலுக்கு உலகம் முழுவதுமிருந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்கு ஆடாதவர்களே இல்லை எனலாம். தமிழில் கேடி மற்றும் கல்லூரி படத்தின் மூலம் அடையாளம் காணப்பட்டவர் தமன்னா.

படிக்காதவன் படத்திற்கு அவருடைய மார்கெட் உயர்ந்தது. அயன், கண்டேன் காதலை, பையா, சுறா என தொடர்ந்து ஹிட் படங்களாக அமைந்தது. தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார் தமன்னா. அவர் கேரியரில் முக்கிய படமாக அமைந்தது பாகுபலி.

ராஜ மெளலியின் இயக்கத்தில், பிரபாஸூடன் இணைந்து நடித்தார் தமன்னா. வசூல் ரீதியாக மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. ஆரம்பத்தில் தமன்னா மீது ஓவர் ஆக்டிங் என்று கருத்துக்கள் வைக்கப்பட்டாலும், தர்மதுரை, தேவி, தில்லாலங்கடி போன்ற படங்களில் அவருடைய நடிப்பின் மூலம் ரசிக்கவும் வைத்திருக்கிறார்.

சமீபத்தில் ஹிந்தியில் தமன்னா நடித்து வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் 2 பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சீரிஸில் தமன்னாவுடன் நடித்தவர் விஜய் வர்மா ஹிந்தியில் ஒருசில படங்களில் நடித்து வருகிறார். தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் சூர்யாவின் 43 படத்தில் விஜய் வர்மா வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

இதுவே விஜய் வர்மாவின் முதல் தமிழ் படம். லஸ்ட் ஸ்டோரிஸில் நடித்த போது தமன்னாவுக்கும் விஜய் வர்மாவுக்கும் இடையில் நட்பு ஏற்பட்டிருக்கிறது. நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறியிருக்கிறது. இந்த ஜோடியை பொது இடங்களில் ஒன்றாக காணமுடிந்தது.

tamannah and vijay varma

விஜய் வர்மாவை காதலிப்பதை ஒப்புக்கொண்ட தமன்னா முன்பு செய்தியளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசியபோது, திருமணத்தின் மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும், ஆனால், இப்போது படங்கள் மீது மட்டுமே தன்னுடைய முழு கவனமும் இருப்பதாகவும் கூறினார்.

ஆனால் தமன்னாவின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்கவேண்டுமென்று முழு மூச்சில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் தமன்ன விஜய் வர்மா திருமணம் நடைபெறுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...