எப்படிப்பட்ட வரிகள்.. தமன்னா பத்தி பள்ளி புத்தகத்தில் இருந்த விஷயம்.. ஒண்ணா கைகோர்த்து பெற்றோர்கள் பாத்த வேலை..

என்னது, நடிகை தமன்னா பற்றி 7 ஆம் வகுப்பு மாணவர்கள் பாட புத்தகத்துல இருக்கா என கேள்விப்படும் அனைவரையும் ஒரு செய்தி கிறங்க வைத்துள்ள நிலையில், இதன் பின்னணி கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹிந்தி, தெலுங்கு திரைப்படங்களுக்கு பின்னர் தமிழ் சினிமாவில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் தான் தமன்னா.

ஆரம்பத்தில் இவர் நடித்த சில திரைப்படங்கள் அந்த அளவுக்கு பெயர் எடுத்து கொடுக்கவில்லை என்றாலும் அயராது உழைப்பால் முன்னணி நடிகையாகவும் உயர்ந்தார் தமன்னா. தமிழ் திரைப்படங்களில் மட்டுமில்லாமல், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்த தமன்னா, முன்னணி நடிகையாக மட்டுமில்லாமல் கிளாமர் பாடல்களில் நடனமாடுவதுடன் சிறு சிறு கதாபாத்திரங்களை கூட தயங்காமல் ஏற்று நடித்து வருகிறார்.

ரஜினிகாந்த், அஜித் குமார், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ள தமன்னா, கடந்த ஆண்டில் ஜெயிலர், போலா ஷங்கர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். மேலும் சமீபத்தில் தமன்னா நடிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி இருந்த அரண்மனை 4 திரைப்படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதுடன் இந்த ஆண்டில் தமிழ் சினிமாவிற்கு சிறந்த கம்பேக்காகவும் அமைந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, வேதா, ஸ்திரீ 2, ஓடேலா 2 உள்ளிட்ட திரைப்படங்களிலும் அடுத்தடுத்து நடித்து வரும் தமன்னா பற்றிய செய்தி ஒன்று தான் தற்போது அதிக அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது. கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு அருகே அமைந்துள்ளது பிரபல தனியார் மேல்நிலைப்பள்ளி. இங்கே 7 ஆம் வகுப்பு புத்தகம் ஒன்றில் நடிகை தமன்னா பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளது. அவரது திரைப்படங்கள், சொந்த ஊர் என அவரது தனிப்பட்ட விவரங்கள் இடம்பெற, இது தான் தற்போது அந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

சிந்தி சமுதாயம் குறித்த விவரங்கள் இந்த பாட திட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், அதன் காரணமாக தான் அந்த சமூகத்தை சேர்ந்த தமன்னா, ரன்வீர் சிங் உள்ளிட்டோரின் விவரங்கள் அதில் இடம்பெற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இதில் உடன்பாடு இல்லாத அந்த குழந்தைகளின் பெற்றோர்கள் தமன்னாவை பற்றி தங்களின் பிள்ளைகள் ஏன் படிக்க வேண்டுமென கடும் எதிர்ப்பையும், அதே நேரத்தில் பள்ளி மீது கடும் கண்டனங்களையும் முன் வைத்துள்ளனர். இந்த சம்பவம், பெங்களூருவை தாண்டி இந்தியா முழுவதும் சர்ச்சையை கிளப்ப, இந்த விஷயத்தில் தனியார் பள்ளி மீது ஏதேனும் நடவடிக்கை பாயுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Published by
Ajith V

Recent Posts