பிரபல விளையாட்டு வீரரை திருமணம் செய்யப் போகும் டாப்ஸி!.. வெளியான செம அப்டேட்!..

நடிகை டாப்சி பத்து வருடங்களாக காதலித்து வந்த தன் காதலனை விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை டாப்சி பஞ்சாபி சீக்கியக் குடும்பத்தை சேர்ந்தவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார். தெலுங்கில் சும்மாண்டி நாதம் என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து தனுஷ் நடித்திருந்த ஆடுகளம் படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். மேலும் வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2, கேம் ஒவர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

டாப்ஸி திருமணம்:

டாப்சி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. அதை தொடர்ந்து டாப்சி பாலிவுட்டில் வெளியான பிங்க் படத்தின் மூலம் தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார். மேலும், பல மொழிகளில் நடித்தாலும் கடந்த மூன்று ஆண்டுகளாக பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் மற்றும் டாப்சி நடிப்பில் வெளியான டன்கி திரைப்படம் அமோகமான வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிஸில் சுமார் 400 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. விக்கி கவுஷல், போமன் இரானி, விக்ரம் கோச்சார் மற்றும் அனில் குரோவர் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தின் ஒடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் பெற்றது.

பேட்மிண்டன் வீரர்:

டாப்ஸி அடுத்து ‘வா லடி ஹை கஹா’ படத்தில் நடித்து முடித்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டு படங்களில் டாப்சி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில்,
டேனிஷ் பேட்மிண்டன் வீரரான மேத்யூஸ் போய் என்பவரை டாப்சி சுமார் பத்து வருடங்கலாக காதலித்து வந்த நிலையில், தற்போது அவரை திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இவர்களது திருமணம் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் மார்ச் மாதம் இறுதியில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. அதையடுத்து பாலிவுட் பிரபலங்களை அழைக்க விரும்புவதால், குடும்பத்தினர் மற்றும் நெறுங்கிய நண்பர்கள் மத்தியில் இந்த திருமணம் சீக்கிய, கிறிஸ்துவ முறைப்படி நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பத்து வருடங்களாக காதலித்து வரும் நடிகை டாப்சி தன் காதலை பற்றி இத்தனை ஆண்டுகளாக வெளிப்படுத்தாமல் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் பாலிவுட்டில் தான் அறிமுகமான சாஷ்மி படூர் (2013) படப்பிடிப்பின் போது தான் மேத்யூஸை சந்தித்ததாக கூறியுள்ளார்.

நடிகை டாப்ஸிக்கு அடுத்த மாதம் திருமணம் ஆகவுள்ள நிலையில், அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...