காக்கிச் சட்டையில் கலக்கிய சூர்யா.. தளபதி விஜய்க்கு மிஸ் ஆன பவர்ஃபுல் ஹீரோ வேடம்.. எந்தப் படம் தெரியுமா?

இயக்குநர் ராஜீவ்மேனனின் உதவியாளராக இருந்து அவரிடம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மின்சாரக் கனவு போன்ற படங்களில் சினிமாவைக் கற்றுக் கொண்டு மின்னலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர்வதான் கௌதம் மேனன். முதல் படத்திலேயே மென்மையான காதல் கதையையும், சூப்பர் ஹிட் பாடல்களையும் கொடுத்து தமிழ் சினிமாவை கவனிக்க வைத்தவர்.

முதல் படத்தை காதலை மையப்படுத்தி எடுத்து விட்டு தனது இரண்டாவது படத்தில் ஆக்சன், காதல் என கமர்ஷியல் களத்தைக் கையில் எடுத்தார். அப்படி அவர் எடுத்து சூர்யாவுக்கு ஆக்சன் ஹீரோவாக மாற்றிய படம் தான் காக்க காக்க.. ஜோதிகா, ஜீவன் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். ஜீவனின் வில்லத்தனமான நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

கிட்டத்தட்ட சூர்யாவின் மாஸ் இமேஜை அதிகரித்த செய்ததில் இந்த படத்திற்கு தான் முக்கிய பங்கு உண்டு. ஆனால் இந்த படம் சூர்யாவிற்கு தயாரானது இல்லையாம்.
ஆனால் அப்படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் ‘பின்குறிப்பு‘. இந்த கதையை முழுக்க முழுக்க விஜய்க்காக தயார் செய்து வைத்தாராம்.

மிரள வைக்கும் நடிகர் திலகத்தின் சாதனை.. ஒரே வருஷத்துல இத்தனை படமா? அதுவும் ஒரே இயக்குநருடன்…

படத்தின் கதையை சொல்ல தன்னுடைய சகாக்களுடன் விஜய் அலுவலகத்திற்கு கௌதம் மேனன் சென்றாராம். அப்போதெல்லாம் விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தான் கதை கேட்டு ஓகே செய்வார். கதையை கேட்க தொடங்கியவருக்கு அதில் பிடித்தம் இல்லாமல் போனதாம். ஏனெனில் ஹீரோ தோக்குற மாதிரி கதை இருக்கு என நோ சொல்லிவிட்டாராம்.

இதனால் கௌதம் மேனனும் அப்செட்டாகி கிளம்பி விடுகின்றார். தயாரிப்பாளரும் இந்தக் கதை வேண்டாம் என கிடப்பில் போட பின்னர் டிராப் ஆகியிருக்கிறது. இந்நிலையில் இந்தக் கதை மேல் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு நிறைய தயாரிப்பாளர்களிடம் சொல்லியும் யாரும் ஓகே சொல்லாமல் போகும் நிலையில் தான் தாணு அந்த படத்தினை தயாரிக்க ஒப்புக்கொள்கிறார். பின்னர் சூர்யாவிடம் கதை சொல்ல அவருக்கு அந்த கதை ரொம்பவே பிடித்து செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சூர்யாவுக்கு இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. சூர்யா-ஜோதிகா காதல் காட்சிகள் திரையில் மிகவும் பிரஷ்ஷாக இருந்தால் ரசிகர்கள் மிகவும் விரும்பிப் பார்த்தனர். மேலும் கௌதம் மேனனின் டிரேட் மார்க் இயக்கமும் இப்படம் மூலம் வெளிப்பட்டது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் இளைஞர்களின் ஹார்ட் பீட்டாக ஒலித்து வெற்றி கண்டது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...