சுரேஷ் கிருஷ்ணாவின் முதல் படம்.. விவியன் ரிச்சர்ட்ஸ் கெட்டப்.. கமல்ஹாசனின் ‘சத்யா’ உருவான கதை..!

சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து அண்ணாமலை, பாட்ஷா போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான முதல் படம் கமல்ஹாசன் நடித்த ‘சத்யா’. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

கே.பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக இருந்த சுரேஷ் கிருஷ்ணா முதன்முதலாக இயக்கிய திரைப்படம்தான் ‘சத்யா’. 1988ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் கமல்ஹாசன், அமலா, ராஜேஷ், கனகராஜ், கிட்டி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

20 வருடங்களுக்கும் மேல் மோதிய கமல் – ரஜினி படங்கள்.. மாறி மாறி கிடைத்த வெற்றி..!

இசைஞானி இளையராஜா இசையில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, நல்ல வசூலையும் பெற்றது.

sathya 2

படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞன் கமல். அப்பா, தங்கை என பாசமான நபர்கள் இருந்தாலும் சித்தி கொடுமையும் உண்டு. சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட ‘சத்யா’ இளங்கன்று பயமறியாது என்ற பழமொழியை ஒட்டி ரவுடிகளின் அட்டகாசத்தை கண்டு பொங்குகிறார்.

இந்த நிலையில்தான் ரவுடிகள் கூட்டத்து தலைவனான அரசியல் தலைவர் ஒருவர் சத்யா மீது கோபப்படுகிறார். இதனையடுத்து ரவுடிகள் கூட்டத்திற்கும் சத்யாவுக்கும் இடையே அவ்வப்போது சண்டை வந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு அரசியல் பிரமுகர் சத்யாவுக்கு அடைக்கலம் தருகிறார்.

அவர் சத்யாவுக்கு தேவையான உணவு, உடை, இருப்பிடம், பணம், கார் என எல்லாவற்றையும் கொடுத்து ‘உன்னை மாதிரி உண்மையானவன் ஒருவர் இருந்தால் நம் நாட்டையே சுத்தப்படுத்திவிடலாம்’ என்று அடிக்கடி வார்த்தையால் குளிப்பாட்டுகிறார்.

ஒரே நாளில் வெளியான 3 மோகன் படங்கள்.. மூன்றும் வெற்றி.. ரஜினி, கமல் கூட செய்யாத சாதனை..!

இந்த நிலையில் தேர்தல் நெருங்கும் நிலையில் அநியாயம் செய்யும் எம்எல்ஏவின் ஊழல்களையும், ரகசியங்களையும் வெளிப்படுத்தினால் நமக்கு சீட் கிடைக்கும் என அந்த அரசியல் தலைவர் கூறுகிறார். இதனையடுத்து சத்யா அந்த ஆவணங்களை எல்லாம் எடுத்து வந்து கொடுக்கும்போதுதான் திடீர் திருப்பமாக அந்த ஆவணங்களை வைத்து, அந்த கட்சியின் தலைவரை மிரட்டி தனக்கு சீட்டு வாங்கிக் கொள்கிறார் அந்த அரசியல் தலைவர்.

அப்போதுதான் தனக்கு அடைக்கலம் கொடுத்த அரசியல் தலைவர் ஒரு போலியானவர் என்றும் துரோகி என்றும் சத்யாவுக்கு தெரிய வருகிறது. இதனையடுத்து அவர் இதுவரை தனக்கு அடைக்கலம் கொடுத்த அரசியல்வாதியை எதிர்க்கத் துணிகிறார். அதனால் ஏற்படும் விளைவு என்ன என்பதுதான் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி.

sathya 1

லேசான மொட்டை தலை, தாடி, கழுத்தில் கயிறு, அரைக்கை சட்டை என கமல்ஹாசன் இந்த படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் இருப்பார். அன்றைய இளைஞர்கள் இவர் மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் போலிருக்கிறார் என்று கூறுவதுண்டு.

இந்த படத்தில் கிட்டி போலி அரசியல் தலைவராக சூப்பராக நடித்திருந்தார். கமல் ஜோடியாக அமலா நடித்திருந்தார். இந்த படத்தின் காதல் காட்சிகள் மிகச் சிறப்பாக இருக்கும்.

இந்த படம் வெளியாகி 35 ஆண்டுகளான பின்னரும் இன்னும் இந்த படம் பலரை பேச வைத்துக் கொண்டிருக்கிறது என்றால் அதற்கு சுரேஷ் கிருஷ்ணாவின் அசத்தலான திரைக்கதைதான் காரணம். லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கியபோது சத்யா படத்தில் உள்ள சில காட்சிகள் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் அவர் பேட்டி அளித்திருந்தார்.

இயக்குனர் கௌதம் மேனன் தனது கையில் இப்போதும் காப்பு அணிந்து இருக்கிறார் என்றால் அது இந்த படத்தை பார்த்த தாக்கம் தான் என்று அவர் பல பேட்டிகளில் கூறியுள்ளார்.

கால் நூற்றாண்டுக்கும் மேலாக ரசிகர்கள் மனதில் இருக்கும் ‘பாட்ஷா’: இனிமேல் இப்படி ஒரு படம் வருமா?

இப்படி ரசிகர்களை மட்டுமின்றி திரை உலகை சேர்ந்தவர்களையும் கவர்ந்த ஒரு திரைப்படம்தான் சத்யா. இந்த படத்தின் மூலம் சுரேஷ்கிருஷ்ணா என்ற அருமையான இயக்குனர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...