ஈகோ இல்லாத மனுஷனா இருக்காரே!.. விஜய்யின் அரசியல் வருகை!.. சூப்பர் ஸ்டார் சொன்ன சூப்பரான விஷயம்!..

நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கியதை அறிந்து பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெறிவித்து வந்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வாழ்த்தினை பகிர்ந்துள்ளார்.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ம் தேதி அரசியல் கட்சியை தொடங்கினார். அதற்கு தமிழக வெற்றி கழகம் என்ற பெயரையும் அறிவித்திருந்தார். மேலும் இன்னும் இரண்டு படங்களுடன் திரைத்துறையை விட்டு தான் விலகுவதாக குறிப்பிட்டிருந்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும், அதேநேரம் 2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

விஜய்க்கு ரஜினிகாந்த் வாழ்த்து:

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார் பேசுகையில், நடிகர் விஜய்யை சூப்பர்ஸ்டார் என கூறியதற்கு அவர் ஏதும் பேசாமல் சிரித்து கொண்டிருந்தது ரஜினி ரசிகர்கர்களுக்கு கடும் கோவத்தை ஏற்படுத்தியது. அதிலிருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் தளபதி விஜய்க்கும் இடையே கடந்த ஆண்டு பிரச்சனை ஆரம்பித்தது.

இதை தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படத்தில் இடம் பெற்ற டைகர் கா ஹுக்கும் பாடலில் பேர பறிக்க நாலு பேரு பட்டத்தை பறிக்க 100 பேரு என விஜய்யை மறைமுகமாக சுட்டிக்காட்டி அனிரூத் பாடிய பாடல் அதிரடியான பதிலடியாக இருந்தது.

இனிமே போட்டியில்லை:

மேலும், அந்த பிரச்சனை சமூக வலைதளத்தில் ரஜினி ரசிகர்களா, விஜய் ரசிகர்களா பார்க்கலாம் என்பது போல் சண்டையாக மாறியது. ரஜினி ஜெயிலர் இசைவெளியீட்டு விழாவில், சூப்பர் ஸ்டார் பட்டத்தின் மேல் தனக்கு ஆசை இல்லை என்றார். மேலும், ரஜினி காக்கா கழுகு கதை ஒன்றை கூறினார். அதில் ரஜினி விஜய்யைத்தான் காக்கா என குறிப்பிடுகிறார் என்று ரஜினி ரசிகர்கள் சர்ச்சையை ஏற்படுத்தினர்.

இதைத் தொடர்ந்து லியோ வெற்றி விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரியிலும் காக்கா – கழுகை வைத்து சொன்னதால் ரஜினிகாந்த் கூறிய கதைக்கு பதிலடி என விஜய் ரசிகர்கள் விஜய் தான் என்னைக்கும் சூப்பர் ஸ்டார் என்று இணையத்தில் சண்டை போட்டுக்கொண்டனர்.

இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க ரஜினிகாந்த் தற்போது நடந்த லால் சலாம் இசைவெளியீட்டு விழாவில் நான் கூறிய கதையில் விஜய்யை குறிப்பிட்டு பேசியதாக இணையதளத்தில் பரவிய செய்தி மிகவும் வருத்தமளித்தது. விஜய் என் கண்ணுக்கு முன்னால் வளர்ந்த பையன். விஜய்க்கு போட்டி விஜய்தான். இதை இதோடு முடித்து விடுங்கள் என்று கூறி ரஜினி vs விஜய் சோஷியல் மீடியா சண்டையை முடித்து வைத்தார்.

ரஜினி காந்த் வேட்டையன் பட ஷூட்டிங்கிற்காக ஆந்திரா சென்ற போது விஜய்யின் அரசியல் வருகை பற்றி கேட்கப்பட்டது. அதற்கு, அவருக்கு வாழ்த்துக்கள் என்று ஒரே வார்த்தையில் பதில் அளித்து சென்றுவிடார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews