பொழுதுபோக்கு

அக்சர் பட்டேல் எடுத்த 3 விக்கெட்டிற்கும் இருந்த சூப்பரான ஒற்றுமை.. மனுஷன் வேற லெவல் தான்…

தோனி தலைமையில் கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த முதல் டி 20 உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றி வரலாறு புடைத்திருந்தது. அதே ஆண்டில் அதற்கு முன்பாக நடந்த ஒரு நாள் உலக கோப்பைத் தொடரில் லீக் சுற்றிலேயே இந்திய அணி தோல்வி அடைந்து வெளியேறி அதிர்ச்சி அளித்திருந்தது. அப்படி ஒரு இக்கட்டான சூழலில், டி 20 உலக கோப்பையும் ஆரம்பமாக பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்திய அணி சிறப்பாக ஆடி கோப்பையைக் கைப்பற்றி இருந்தது.

அப்படி ஒரு சூழலில், சுமார் 7 ஆண்டுகள் கழித்து 2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக டி20 உலக கோப்பைத் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி முன்னேறியும் தோல்வி அடைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போதுஉ சுமார் 10 ஆண்டுகள் கழித்து தற்போது இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. இதனால் 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலக கோப்பையை கைப்பற்றும் பொன்னான வாய்ப்பும் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணிக்கு கிடைத்துள்ளது.

அவர்களுக்கு எதிராக இறுதி போட்டியில் ஆடவிருக்கும் தென்னாபிரிக்காவும் இதுவரை ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் இறுதி போட்டிக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. அந்த அணியை பொறுத்தவரையில் பந்து வீச்சும் பலமாக இருப்பதால் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு கடுமையான சவால் காத்திருப்பதாகவே தெரிகிறது.

இதுவரை நடப்பு டி20 உலக கோப்பைத் தொடரில் இரு அணிகளும் சந்திக்க, யார் அதனை இறுதி போட்டியிலும் தக்க வைக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதனிடையே, இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு பந்து வீச்சாளர்கள் மிகப் பெரிய பங்கு வகித்திருந்தனர்.

அதிலும் சுழற்பந்து வீச்சாளர்களான அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இணைந்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தியதால் இந்தியாவின் வெற்றியும் எளிதாக அமைந்திருந்தது. அதிலும் ஜோஸ் பட்லர், பேர்ஸ்டோ, மொயீன் அலி என அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன மூன்று பேரையும் அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட் எடுத்து அசர வைத்திருந்த அக்சர் படேல், ஆட்ட நாயகன் விருதினையும் வென்றிருந்தார்.

இதனிடையே, அவர் எடுத்த 3 விக்கெட்டுகளுக்கும் உள்ள சூப்பரான ஒற்றுமையை தற்போது பார்க்கலாம். தான் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே பட்லர் விக்கெட்டை சாய்த்திருந்தார் அக்சர் படேல். இவரது அடுத்த ஓவரின் முதல் பந்திலும் பேர்ஸ்டோ அவுட்டாக, தனது 3 வது ஓவரின் முதல் பந்திலும் மொயீன் அலி விக்கெட்டை காலி செய்திருந்தார்.

இப்படி அக்சர் படேல் எடுத்த 3 விக்கெட்டுகளும், அவர் வீசிய முதல் 3 ஓவர்களின் முதல் பந்தில் சாய்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Published by
Ajith V

Recent Posts