அடுத்தடுத்த போட்டிகளில் சதமடித்த சுப்மன் கில்.. குவியும் வாழ்த்துக்கள்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே தற்போது நடைபெற்று வரும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன்கில் அபாரமாக சதம் அடைத்துள்ளார்.

கடந்த 15ஆம் தேதி இலங்கைக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த சுப்மன்கில் கில் இன்று நடைபெறும் போட்டியிலும் சதம் அடித்ததை அடுத்து அடுத்தடுத்த போட்டிகளில் சதம் அடைத்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இன்றைய தினம் நடைபெற்று வரும் நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது. இதனை அடுத்து சுப்மன் கில் தற்போது 122 ரன்களுடன் ஆடி வருகிறார். மேலும் ஹர்திக் பாண்டியா 22 ரன்கள் அடித்து களத்தில் உள்ளார்.

இதுவரை நான்கு விக்கெட்ட்டுகளை இந்தியா இழந்தபோதிலும் 37 ஓவர்களில் 234 ரன்கள் எடுத்துள்ளதால் இந்தியாவில் ஸ்கோர் 300ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் ரோஹித் சர்மா, இஷான் கிசான், விராத் கோஹ்லி, சூரியகுமார் யாதவ் ஆகிய நால்வரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் சுப்மன் கில் அபாரமாக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.