குலசை முத்தாரம்மன் கோவில் விழா நடத்த போராட்டம்

f5db6eb952145b8b62bd12da4fe42843

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ளது குலசேகரப்பட்டினம். இந்த ஊரில் வருடா வருடம் நடக்கும் தசரா விழா புகழ்பெற்றது. இங்குள்ள முத்தாரம்மனுக்கு விதவிதமாக மாறுவேடம் அணிந்து பக்தர்கள் வருவர். இதை நேர்த்திக்கடனாக இதை செய்வர். சிலர் யாசகம் பெற்றும் கோவிலுக்கு காணிக்கையாக செலுத்துவர்.

மைசூர் தசரா விழாவுக்கு பிறகு தமிழ்நாட்டில் நடக்கும் இந்த விழா  புகழ்பெற்றது. நவராத்திரி 9 நாட்களும் திருவிழா நடத்தப்பட்டு விஜய தசமி அன்று முத்தாரம்மன் குலசேகரப்பட்டினம் கடற்கரையில் சூரனை வதம் செய்வாள்.

இந்த நிலையில் இந்த வருடம் கொரோனா காரணமாக இந்த விழாக்களுக்கு இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை.

பாரம்பரியமாக கொண்டாடப்படும் இவ்விழாவுக்கு அனுமதி அளிக்க கோரி இப்பகுதி மக்கள்  வரும் 21ம் தேதி போராட்டம் நடத்துகின்றனர்.

வரும் 21ம் தேதி குலசேகரப்பட்டினம் அரசு மருத்துவமனை அருகே தசரா விழாவை நடத்த பொதுமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews