ஸ்ரீரங்கத்தில் மட்டும் இன்று வைகுண்ட ஏகாதசி

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ளது புகழ்பெற்ற வைணவத்தலமான ரங்கநாதர் கோவில். இது 108 வைணவ ஷேத்திரங்களில் ஒன்று மேலும் திருப்பதி போல் அதிகமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை புரிகிறார்கள்.

இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா இன்று கொண்டாடப்பட்டது. அதிகாலையில் சொர்க்கவாசல் கதவு திறக்கப்பட்டு பெருமாள் எழுந்தருளினார்.

பொதுவாக அனைத்து பெருமாள் கோவில்களிலும் மார்கழி மாதம்தான் வைகுண்ட ஏகாதசி வரும். மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி திதியில் தான் வைகுண்ட ஏகாதசி விழா நடக்கும்.

அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில்தான் வைகுண்ட ஏகாதசி வருவதாக நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் ஸ்ரீரங்கத்தில் மட்டும் சில சம்பிரதாயங்களின் அடிப்படையில் இன்று வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுவதாக கூறப்படுகிறது.

மற்ற வைணவ கோவில்களில் அடுத்த மாதம் 2022 ஜனவரியில் தான் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.