ஸ்ரீபெரும்புதூர் அருகே வழிபாட்டில் இருந்த கோவில் இடிப்பு- பக்தர்கள் கதறல்

காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரத்தில் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவில் ஆக்ரமிப்பில் உள்ளதாக வருவாய்த்துறையினர் கூறி இருந்த நிலையில் இந்த கோவில் நேற்று இடிக்கப்பட்டது.

இக்கோவில் அடையாறு ஆற்றை ஆக்ரமித்து கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே நீர்வளத்துறையினர், வருவாய்த்துறையினர் இக்கோவிலை இடிக்க முயற்சி நோட்டீஸ் வழங்கிய நிலையில் இந்த கோவிலை நேற்று இடிக்க வந்தனர்.

ஜேசிபி இயந்திரம் வைத்து கோவில் கோபுரம் தகர்க்கப்பட்டபோது பக்தர்கள் ராமா ராமா என்று கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

வழிபாட்டில் இருந்த இந்த கோவில் இடிக்கப்பட்டதால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.