பஞ்சாய் பறந்த பாகிஸ்தான் வீரர்களின் விக்கெட்!! ஆசிய கோப்பை தூக்கிய இலங்கை;

இன்றைய தினம் ஆசிய கோப்பை இறுதி போட்டி நடைபெற்றது. இதில் ஸ்ரீலங்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகள் தகுதி பெற்றன. இந்த இரண்டு அணிகளும் இந்தியாவை வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடுமையான இன்றைய போட்டி இன்று இரவு 7:30 மணிக்கு துபாய் மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை வீரர்கள் 20 ஓவர் முடிவில் 170 ரன்கள் அடித்தனர். அவர்கள் வெறும் ஆறு விக்கெட்டுகளை மட்டுமே இழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் 171 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற முனைப்போடு களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் தொடக்கத்திலேயே தடுமாற்றத்தை தழுவினர். இதனால் சொற்பரன்களில் பாகிஸ்தான் வீரர்கள் அவுட் ஆகி மைதானத்தை விட்டு வெளியேறினர்.

இதனால் 20 ஓவர் முடிவில் இலங்கை பந்துவீச்சை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் வெறும் 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றதோடு மட்டுமில்லாமல் ஆசிய கோப்பையை தட்டி தூக்கியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.