வாழ்வா சாவா நிலைக்குப் போன இந்திய கிரிக்கெட் அணி!! பந்துவீச்சை தேர்வு செய்த தென்னாப்பிரிக்கா;

தற்போது இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா அணி 5, 20 ஓவர் போட்டிக்கான தொடரை மேற்கொண்டு வருகிறது. இதில் தற்போது மூன்று 20 ஓவர் போட்டிகள் நடைபெற்று முடிந்தன. இதில் தென் ஆப்பிரிக்க அணி 2க்கு 1 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.

3-வது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரில் இருப்பதற்கான வாய்ப்பை தக்க வைத்தது. இந்த நிலையில் இன்றைய தினம் விறுவிறுப்பான 4வது ஆட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,

இந்த ஆட்டம் குஜராத் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனால் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக ருத்ராஜ் மற்றும் இஷான் கிசன் களம் இறங்கியுள்ளனர். மேலும் இந்த போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்திய அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும்கூட மீதமுள்ள ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றால்தான் தொடரை கைப்பற்ற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.