சிவபெருமான் தோற்றத்தின் தத்துவம்

ஒரு கடவுள் சுடுகாட்டு சாம்பலை பூசி இருப்பாரா?! பாம்பு அணிகலனாய், உடுக்கையினை கையில் கொண்டு, புலித்தோல் ஆடையாய் யாராவது சிவனை தவிர யாராவது காட்சியளிப்பார்களா?!’ சிவனின் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும்போது அவரின் இந்த தோற்றத்திற்கென ஒரு காரணம் இல்லாமலா போகும்?!

c5ebdd0bade40ef378e613537738e4c5

பாம்பு..

சிவபெருமான் உடலிலிருக்கும் பாம்பு, அவர்மீது நம்பிக்கை வைத்திருக்கும் நம்’ஜீவன்’ அல்லது ஆன்மாவை குறிக்கும். ஒவ்வொரு உயிரினமும் தனக்கு மிஞ்சிய கடவுள் சக்தியை இருப்பதை நம்புவதை இது குறிக்கிறது. மேலும் பாம்புகள் என்றால் நாம் பயம் கொள்வோம். அனைத்து விதமான உணர்ச்சிகளையும் சிவபெருமான் துறந்துள்ளதால், அவருக்கு பயம் இருக்காது. அதனால் ஆசையை துறந்தால் எந்தவித கெட் அவர் கழுத்தை சுற்றி அவர் பாம்பை வைத்திருக்கிறார்.

சுடுகாட்டு சாம்பல்..

சிவபெருமான் தன் உடம்பின் மீது சாம்பல் அல்லது விபூதி பூசிக்கொண்டிருப்பதை நாம் கவனித்திருப்போம். விபூதி என்பது மனித வாழ்க்கையின் முடிவை குறிக்கும். மனிதன் தன் முடிவை மறந்து விடக்கூடாது என்பதற்காகவேதான் தன் உடம்பு முழுவதும் விபூதியை பூசிக்கொண்டுள்ளார் சிவபெருமான். உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினமும் சாம்பலாக வேண்டும் என்பது இயற்கையின் நியதி.

104fc1d3c22d620758d61e455c093566-1

ஜடாமுடி..

ஜடையிட்ட சிவபெருமானின் படர்ந்த தலை முடி என்பது அவர் ‘வாயு’, அதாவது காற்றின் தலைவர் என்பதை குறிக்கும். காற்று என்பது ஒவ்வொரு உயிரினமும் வாழ்வதற்கு அதிமுக்கியமானதாகும். 

ருத்ராட்ச மாலை.

ருத்ராட்சை மாலை மற்றும் கைகாப்பையும் சிவபெருமான் அணிந்திருக்கிறார். அவரின் கழுத்து மாலை 108 மணியை கொண்டுள்ளதாகும். அது இந்த அண்டத்தை உருவாக்க உதவும் கூறுகளை குறிக்கும். அனைத்துவித கூறுகளுக்கும் சிவபெருமானே தலைவர் என்பதையும் அது குறிக்கிறது.

புலித்தோல்

புலித்தோல் என்பது சக்தியை குறிக்கும். சக்தி என்பது சிவனின் பாதி என்பதால், அண்டத்தில் உள்ள அனைத்து வலிமைகளையும் அவர் வெற்றிக்கொண்டதை புலித்தோல் குறிக்கும். 

பிறை

‘சந்திரசேகரன் என்றொரு பெயர் சிவனுக்குண்டு. . அவர் தலையிலிருக்கும் பிறை, அமாவாசை கழித்து ஐந்தாம் நாளின் தோற்றத்தை கொண்டது. ஒவ்வொரு செயலின் கால சுழற்சியை, ஆரம்பம் முதல் இறுதி வரையிலான நிகழ்வுகளை குறிக்கும். அதனால் தான் நிலவு என்பது நேரத்தை அளவிட பயன்படுத்தப்படுகிறது. நேரத்தை கட்டுப்படுத்துவது சிவபெருமானி வேலை. அதனால்தான் அவர் தலையிலிருக்கும் பிறை குறிக்கிறது..

கங்கை..

மனித உயிர்கள் அனைத்தும் அந்த கங்கை நீரினை போல தூய்மைனாதாகவும், புனிதமானதாகவும் இருக்க வேண்டுமென்பதை உணர்த்தவே கங்கையை சடாமுடியில் சூடி இருக்கிறார்..

இப்படி சிவபெருமானின் தோற்றத்திற்கான காரணத்தை புரிந்துக்கொண்டு போற்றி அதன்படி வாழ்ந்தால் சிவ அருள் கிட்டும்.

Read more at: https://tamil.boldsky.com/insync/2014/shivratri-spcl-significance-of-lord-shiva-s-ornaments/articlecontent-pf17288-005280.html

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.