அடுத்த தளபதி நீங்கதான்!.. சிவகார்த்திகேயன் டெடிகேஷனை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்.. SK21 அப்டேட்!

ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாராகி வரும் படம் எஸ்கே 21 என அழைக்கப்பட்டு வருகிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் இந்த படம் விரைவில் திரைக்கு வர காத்திருக்கிறது.

வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி சிவகார்த்திகேயன் தனது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், அதனை முன்னிட்டு 16-ஆம் தேதி மாலை ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சிவகார்த்திகேயன் படத்தின் டைட்டில் டீசர் ரிலீஸ் ஆக உள்ளது.

எஸ்கே 21 தரமான வீடியோ:

இந்நிலையில் தற்போது அதற்கு முன்னோட்டமாக அந்தப் படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் எந்த அளவுக்கு மெனக்கெட்டு ரெடியாகி வருகிறார் என்கிற தாறுமாறான வீடியோ ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு சிவகார்த்திகேயன் ரசிகர்களை.

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை பிக்பாஸ் நிகழ்ச்சியை இயக்கி வந்த ராஜ்குமார் பெரியசாமி பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார்.

துப்பாக்கி படத்தில் நடிகர் விஜய் ராணுவ வீரராக நடித்தது போல இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரனாக நடித்துள்ளார். அதற்கேற்ற அளவுக்கு தனது உடம்பை கட்டுக்கோப்பாக மாற்ற கடுமையான உடற்பயிற்சிகளை செய்யும் காட்சிகளையும், துப்பாக்கி எடுத்து குறிபார்த்து சுடும் காட்சிகளையும் வெளியிட்டு சிவகார்த்திகேயன் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

சிவகார்த்திகேயனின் வேறலெவல் டெடிகேஷன்:

அடுத்த தளபதி சிவகார்த்திகேயன் தான் என அவரது ரசிகர்கள் அவரது இந்த டெடிகேஷன் பார்த்து கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். சினிமாவில் இருந்து நடிகர் விஜய் இன்னும் இரண்டு படங்களுடன் விலக உள்ள நிலையில், அவரது இடத்துக்கு தமிழ் சினிமாவில் போட்டியின் உதவி வருகிறது.

அதில் முதல் நபராக நடிகர் சிவகார்த்திகேயன் பெயர் அடிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால், விஜய் அளவுக்கு சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் வட்டாரம் என்கிற கேள்விக்கு உரியும் எழத்தான் செய்கிறது. பிரின்ஸ் மற்றும் அயலான் படங்கள் கொஞ்சம் சொதப்பினாலும் வசூலை அள்ளிக் கொடுக்காமல் சரிவை சந்தித்து வருவதை சிவகார்த்திகேயன் சரி செய்தால்தான் அடுத்த பாக்ஸ் ஆபிஸ் கிங்காக அவரால் மாற முடியும் எனக்கு கூறுகின்றனர்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews