அள்ளிக் கொடுத்த சிவகார்த்திகேயன்.. இப்படி ஒரு தாராள மனசா?

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஒரு காமெடி வசனம் வரும். சத்யராஜ் தனது மகளின் திருமணத்திற்கு ஒரு கோடி செலவு செய்தார் என ஒரு கிராமத்து பெண் சொல்ல அதற்கு சூரியும், சிவகார்த்திகேயனும் ஒரு கோடிப்பு.. நீ பார்த்த என்று கலாய்ப்பார்கள். ஆனால் இன்று அதே சிவகார்த்திகேயன் ரூ. 50 லட்சம் நிதி வழங்கி ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

சென்னையில் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்துக்காக புதிய கட்டிடம் கட்டப்பட்டு வரும் வேளையில் தற்போது பாதிக்கும் மேல் பணிகள் நிறைவடைந்துள்ளன. இடையில் கொரோனா காலத்தில் பணிகள் தொய்வடைந்து நிதிச்சுமை ஏற்பட்டது. ஏற்கனவே சுமார் 40கோடி செலவில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த வேளையில் தற்போது மேலும் சுமார் 25 கோடி தேவைப்பட்டது. இதனால் பணிகள் பாதிப்படைந்தது.

இதனையடுத்து உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் தளபதி விஜய், மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஏற்கனவே தலா 1 கோடி ரூபாய் நிதி வழங்கினர். இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது பங்களிப்பாக ரூ.50 லட்சம் நிதியை வழங்கியுள்ளார். இதுகுறித்து தென்னிந்த நடிகர் சங்கம் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளது. இதனை தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தியிடம் நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கினார்.
தற்போது நடிகர் சங்கத்தின் பணிகள் மீண்டும் பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டு தொடர்ந்து பணிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

எம்.ஜி.ஆரின் வாழ்க்கையை மாற்றிய மூன்று அண்ணாக்கள்.. இப்படி ஒரு பாசப் பிணைப்பா?

நடிகர் சிவகார்த்திகேயன் தனது வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை சமூகப் பணிகளுக்காக செலவழித்து வருகிறார். அந்த வகையில் கொரோனா நிவாரண நிதி, மிக்ஜாம் புயல் நிவாரண நிதி போன்றவற்றை அளித்து வருகிறார். தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ்-ன் அமரன் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் இதற்கு அடுத்தாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் சாதாரண பங்கேற்பாளராக இடம் பெற்று மெரீனா படம் மூலம் ஹீரோவாக உயர்ந்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. மேலும் நடிப்பதோடு நிறுத்தாமல் தயாரிப்பு, சமூக சேவை என அனைத்திலும் கால்பதித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...