பாடலைக் கேட்டு கதறி அழுத சிவாஜி, டிஎம்எஸ், எம்எஸ்வி! அப்படி ஒரு பாடலை எழுதிய கண்ணதாசன்!

நடிகர் திலகம் சிவாஜியின் ஒரு திரைப்படத்திற்காக பாடல் எழுதும் வாய்ப்பு கண்ணதாசனை சென்றடைந்துள்ளது. அந்தப் பாடலை எழுதி முடித்தவுடன் கவிஞர் கண்ணதாசனும் அந்த வரிகளை நினைத்து பார்த்து அழுதுள்ளார். அதன் பின் அந்த பாடல் இசையமைப்பிற்காக அனுப்பப்படுகிறது. அந்த பாடலுக்கு இசையமைத்த எம் எஸ் வி அந்த வரிகளை பார்த்து அழ தொடங்கியுள்ளார். அதன் பின் இசையமைக்கப்பட்டு அந்த பாடலுக்கு டி எம் எஸ் குரல் கொடுத்திருந்தார். அவர் அந்த பாடல் வரிகளை பாடும் பொழுது நிஜமாகவே அழுதுள்ளார். அதன் பின் இந்த பாடல் சிவாஜியிடம் செல்கிறது. இந்த பாடலின் வரிகளை கெட்ட சிவாஜியும் கண் கலங்கியுள்ளார். இந்தப் பாடல் என்ன பாடல் எந்த படத்தில் இடம்பெற்றுள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1981 ஆம் ஆண்டு நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் கல் தூண். இந்த படத்தில் நடிகர் திலகம் சிவாஜியும் அவருக்கு ஜோடியாக கே ஆர் விஜயாவும் இணைந்து நடித்திருப்பார்கள். இந்த படத்திற்கு எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்துள்ளார், மேலும் இந்த படத்தில் கிட்டத்தட்ட மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளது. இந்த மூன்று பாடல்களுக்கும் கவியரசு கண்ணதாசன் அவர்கள்தான் பாடல் வரிகளை எழுதிக் கொடுத்திருந்தார். இந்த படம் அந்த காலத்தில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தின் மையக்கதை கிராமத்தில் அனைவரும் மதிக்கக்கூடிய நல்ல ஒரு உயர்ந்த மனிதராகவும் ஒரு விவசாயியாகவும் வாழ்ந்து வருபவர் தான் நடிகர் திலகம் சிவாஜி. அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் ஒரு மகனுக்கு வாய் திக்கி திக்கி பேசும் குறைபாடு இருந்துள்ளது. மற்றொரு மகன் அப்படி அல்லாமல் மற்ற அனைவரையும் போல சிறப்பாக பேசும் திறமை படைத்த ஒரு நபர். இதனால் பெற்ற தாய் தந்தையரை மதிக்காமலும் மற்ற யாரையும் மதிக்காமலும் ஆணவத்தில் நடக்கும் குணாதிசயம் அவரிடம் இருந்துள்ளது. அது மட்டுமல்லாமல் பட்டணத்தில் படிப்பதற்காக செல்லும் அந்த இரண்டாவது மகன் அங்கு பெண்களுடன் தவறான பழக்கத்தில் ஈடுபட்டு வருகிறார். அதே நேரத்தில் போதை பொருளுக்கும் அடிமையாக மாறிவிடுகிறார்.

படிப்பை முடித்து கிராமத்திற்கு திரும்பும் அவர் இந்த பழக்கத்திலிருந்து மீளாமல் கிராமத்திலும் அதே பழக்கத்தை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதை கவனித்த சிவாஜி ஒரு சிறந்த தந்தையாக மகனை அழைத்து கண்டித்துள்ளார். தந்தை கண்டித்ததால் கோபப்பட்ட அந்த இளைஞன் இனிமேல் உங்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை உங்களை அவமானப்படுத்துவதை என் குறிக்கோள் என கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறுகிறான். இதனால் மனமுடைந்து இருக்கும் நடிகர் திலகம் சிவாஜி தன் மனதில் இருக்கும் வலியுடன் பாடக்கூடிய ஒரு பாடல் தான் இந்த பாடல். வளர்த்த கிடா முட்ட வந்தால் வைத்த செடி முன்னாள் என தொடங்கும் அந்த பாடல் வரிகள்.

மக்களின் அன்பும், பாசமும் போதும்… இந்த விருது எல்லாம் எனக்கு வேண்டாம்.. கிடைத்த விருதை திருப்பி அனுப்பிய எம்ஜிஆர்!

இரண்டு மகன்களைப் பெற்ற தந்தையின் இந்த நிலைமையை புரிந்து கொண்டு கவியரசு கண்ணதாசன் எழுதிய அந்த பாடல் வரிகள் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தது. இந்த பாடல் வரிகளை எழுதும் பொழுது தான் கவிஞர் கண்ணதாசனும் கண்கலங்கி உள்ளார். அதே நேரத்தில் இந்த பாடலுக்காக இசையமைத்த எம் எஸ் வி கண்கலங்கியுள்ளார். அதை தொடர்ந்து இந்த பாடலை பாடிய டி எம் எஸ் அந்தப் பாடலின் இறுதி வரியை மூன்று குரலில் பாடி கண்கலங்கி உள்ளார். அதன்பின் படப்பிடிப்பின் போதும் நடிகர் சிவாஜி இந்த ஒரு பாடல் வரிகளை கேட்டு நிஜமாகவே அழுதுள்ளார். கவிஞர் கண்ணதாசன் தன் பாடல் வரிகளின் மூலம் ரசிகர்களை அழ வைத்துள்ளது இந்த ஒரு சம்பவத்தின் மூலம் உறுதியாகி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...