முருகனுக்கு வியர்க்கும் அதிசயம்- கந்த சஷ்டி விழா சிக்கல் சிங்காரவேலர்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது சிக்கல் சிங்காரவேலர் கோவில். இக்கோவில் நாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் உள்ளது. இத்தல இறைவன்  நவனீதேஸ்வரர் எனும் வடிவில் அருள் பாலிக்கும் சிவனாவார்.

இங்கு பெருமாள் சன்னதியும் உள்ளது. இங்குள்ள வேல் நெடுங்கண்ணியம்மனிடம் தான் முருகப்பெருமான் வேல் வாங்கினார். வாங்கிய வேலை வைத்துதான் சூரனை அழித்தார் என்பது வரலாறு.

அதனால் சூரசம்ஹாரத்தன்று திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக பலரும் படையெடுக்கும் கோவில் இதுதான். இங்கு அன்னையான பார்வதி தேவி எனும் வேல் நெடுங்கன்னியிடம் முருகன் வேல் வாங்கும்போது அவருக்கு வியர்த்ததாம் அதன் நினைவாக இன்றும் வேல் வாங்கும்போது முருகனுக்கு வியர்வை வருவதாக ஐதீகம். முருகனுக்கு வியர்வை வருவதை பார்ப்பதற்காக சூரசம்ஹாரத்தன்று இத்தலத்திற்கு அதிக பக்தர்கள் விரைகின்றனர்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print