காவாலா பாடலுக்கு நடனமாடிய சிம்ரன்! தெறிக்கவிடும் வைரல் வீடியோ!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் தமன்னா ஹீரோயினாக நடித்துள்ளார்.

மேலும் படத்தில் சிவராஜ்குமார், ஜாக்கிசராப், வசந்த் ரவி யோகிபாபு, ரம்யா கிருஷ்ணன், விநாயகன் உட்பட பலர் முக்கிய நட்ஷத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போழுது முடிவடைந்துவிட்டது, அதை தொடர்ந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜெயிலர் திரைப்படம் அடுத்த மாதம் 10ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் முதல் பாடலான காவாலா பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமன்னாவின் நடனமும், ரஜினியின் ஸ்டைலான தோற்றம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. மேலும் தமன்னாவின் துள்ளலான நடனம் இணையத்தில் செம உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. அதை தொடர்ந்து இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி பலர் பாடலுக்கு ரீலிஸ் செய்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

ஜவான் படத்தில் அனிருத் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? தாறுமாறான வளர்ச்சி தான்..

இந்த நிலையில் தமன்னா வெளியிட்ட வீடியோ போல் நடிகை சிம்ரன் காவலா பாடலுக்கு நடனம் ஆடுவது போன்ற ரிலீஸ் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த வீடியோ AI எனப்படும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தின் மூலம் பாடலுக்கு சிம்ரன் நடனமாடும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீயாக பரவி வருகிறது.மேலும் தமன்னாவின் காவாலா பாடல் சமூக வலைத்தளங்களில் பல மில்லியன்களை கடந்த பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்து வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...