சிவாஜியின் நலந்தானா பாடலுக்கு பின் இப்படி ஒரு கதையா? அசந்து போன நாதஸ்வர வித்வான்கள்..!

தமிழ் சினிமாவில் தன் நடிப்பின் மூலம் ரசிகர்களை மட்டுமல்லாமல் படக்குழுவினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஒரே நடிகர் சிவாஜி தான். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1968 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் தில்லானா மோகனாம்பாள். இந்த படத்தில் கதாநாயகியாக பத்மினி, எம்எஸ் பாலையா, நாகேஷ் மனோரம்மா என பல துணை நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

ஏபி நாகராஜன் இயக்கத்தில் கே வி மகேந்திரன் இசையில் உருவான தில்லானா மோகனாம்பாள் படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர் மனதில் நீங்காத இடம் பிடித்தவை. அதிலும் நலந்தானா பாடல் யாராலும் மறக்க முடியாது. இன்றளவும் சினிமாக்களில் யாரையாவது நலம் விசாரிப்பது போல் காட்சி அமைந்தால் பேக் ரவுண்டில் இந்த பாடல் தான் இடம்பெற்றிருக்கும். அந்த அளவிற்கு அந்த காலத்தில் இருந்து இப்போது வரை இந்தப் பாடலுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.

படங்களிலும் நிஜக் கதாபாத்திரமாகவே நடிக்கும் சிவாஜி அவர்கள் இந்த படத்தில் உண்மையான நாதஸ்வர வித்வான் போலவே கலக்கி இருப்பார். அதேபோல் இந்த படத்தில் இடம்பெற்ற நாதஸ்வர காட்சிகள் அனைத்திற்கும் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

படம் பார்க்கும் நமக்கு நிஜத்தில் சிவாஜி அவர்களே இசையமைப்பதாக தோன்றினாலும் இந்த படத்திற்கு உண்மையாக இசையமைத்தவர்கள் மதுரையை சேர்ந்த நாதஸ்வர வித்வான்கள் ஆன என் பி என் சேதுராமன், பொன்னுச்சாமி சகோதரர்கள் தான். பொன்னுச்சாமி அவர்கள் ஒரு பேட்டியின் போது இந்த படத்தில் நடந்த சுவாரசியமான தகவலை கூறியுள்ளார்.

நாதஸ்வர வித்வான் பொன்னுச்சாமி அந்த பேட்டியில், “தில்லானா மோகனாம்பாள் படத்திற்கு நாங்கள் தான் இசையமைக்க போகிறோம் என்ற செய்தி உறுதியான பட்சத்தில் நடிகர் சிவாஜி கணேசன் ஒரே ஒரு தகவலை கூறியிருந்தார். இந்த பாடல் ரெக்கார்டிங் செய்யும் பொழுது நான் அந்த இடத்தில் இருக்க வேண்டும். நான் இல்லாமல் இந்த பாடலுக்கான ரெக்கார்டிங் நடக்கக்கூடாது என்று கூறியிருந்தார்.

அதன்படியே கே வி மகாதேவன் குழுவினரோடு ரெக்கார்டிங் நடக்கும் பொழுது சிவாஜி கூடவே இருப்பது வழக்கம். நாதஸ்வரத்தை நாங்கள் வாசிக்கின்ற போது எங்களுடைய முக பாவனைகள், அழுத்தம் கொடுக்கின்ற விரல் அசைவு, நாதஸ்வரத்தை நாங்கள் தாங்கிப் படிக்கின்ற போக்கு இவற்றையெல்லாம் நுணுக்கமாக கவனித்துக் கொண்டிருந்தார் சிவாஜி.

படத்தை பார்த்த பிறகு தான் அவருடைய கவனிப்பின் அர்த்தம் புரிந்தது. சென்னையில் 20 நாட்களுக்கு மேல் ரிகர்சல் நடந்தது. ஏவிஎம் ஸ்டுடியோவில் நலந்தானா பாடல் எடுத்து இருந்தோம். ஒரு சமயம் ரிகர்சலில் ஒரு பக்கம் நாங்கள், இன்னொரு புறம் சிவாஜி, ஏவிஎம் ராஜன், பாலையா, சாரங்கபாணி குழுவினர். நாங்கள் வாசிக்க, எதிரே அவர்கள் வாசிக்கின்ற மாதிரி நடிக்க வேண்டும். இது எப்படி இருக்கிறது என்று எங்களிடம் கேட்டார் சிவாஜி.

ஒரே படத்தில் ஹீரோ – வில்லன் என இரண்டு கதாபாத்திரத்திலும் கலக்கிய ஹீரோக்கள்!

நீங்க தான் ஒரிஜினல் போல் உள்ளது என வாசித்த நாங்கள் சொன்னதும் சிவாஜிக்கு மகிழ்ச்சி. ஜெராக்ஸ் பேப்பர் மாதிரி எங்களுடைய முக பாவனைகளை பார்வையிலேயே உறிஞ்சிடுவார், நாதஸ்வரத்தை அழுத்தி வாசிக்கும் போது கழுத்து நரம்பு துடிப்பது கூட தெரியும்படி அழகாக நடித்திருப்பார் சிவாஜி.

பாலையா அண்ணன் எங்கள் குழுவில் இருந்த தவுல் வித்துவானிடம் வாசிக்கவே கற்றுக் கொண்டு எங்களுக்கு வாசித்து காண்பித்தார். மேலும் படத்தில் அமர்க்களப்படுத்தி விட்டார். அவ்வளவு அற்புதமான கலைஞர்கள் என நிஜ நாதஸ்வர வித்துவான்களே மிரளும் அளவிற்கு நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் அசத்தியிருப்பார்.” என்று கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...