9வது பிறந்தநாள் கொண்டாடிய குட்டி தல!.. அப்பா, அம்மா, அக்கா செம ஹேப்பி!..

விடாமுயற்சி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்னமும் தொடங்காமல் இருக்கும் நிலையில் தனது குடும்பத்துடன் அதிக அளவில் நேரத்தை செலவழித்து வருகிறார் நடிகர் அஜித்.

தனது மகள் பிறந்தநாளை துபாயில் கோலாகலமாக புத்தாண்டு கொண்டாட்டத்துடன் சேர்த்து கொண்டாடி இருந்தார் நடிகர் அஜித். அதன் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.

advik1

அஜித் மகன் பிறந்தநாள் கொண்டாட்டம்:

இந்நிலையில், கடந்த மார்ச் 2ம் தேதி தனது மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை தனது குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை நடிகை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களுக்கு விடாமுயற்சி அப்டேட் கிடைக்கவில்லை என்று கவலைப்படாதீங்க, இதோ அஜித் தரிசனம் என இந்த புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

advik

2015ம் ஆண்டு அஜித் மற்றும் ஷாலினிக்கு பிறந்த இரண்டாவது குழந்தை ஆத்விக் தனது 9வது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். கால்பந்து விளையாட்டில் பெரும் ஆர்வத்தை செலுத்தி வரும் அவர் தனது பிறந்தநாளுக்கு ஃபுட்பால் டிசைன் கேக் வேண்டும் என கேட்ட நிலையில், அஜித் மற்றும் ஷாலினி அதனை ஏற்பாடு செய்து குடும்பத்துடன் எளிமையான முறையில் பர்த்டே பார்ட்டியை கொண்டாடி உள்ளனர்.

அஜித் மற்றும் ஷாலினியின் ரொமான்டிக் புகைப்படங்களுடன் ஃபுட்பால் தீம் கேக்கை மகன் ஆத்விக் வெட்டும் காட்சிகளும், முகத்தை மட்டும் நீட்டியபடி அனோஷ்கா இருக்கும் புகைப்படமும் வைரலாகி வருகிறது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...