சீவலப்பேரி சுடலைமாட சாமி கோவில் சிறப்புகள்

மற்ற மாவட்டங்களை விட நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சுடலை மாடசாமி கோவில்கள் அதிகம் உள்ளது.

இந்த பகுதியில் அதிகமான சுடலைமாடசாமி கோவில்கள் இருந்தாலும் நெல்லை மாவட்டம் சீவலப்பேரியில் உள்ள சுடலை மாடசாமி கோவில் மிக புகழ்பெற்ற கோவிலாகும்.

இந்த பகுதிகளில் சுடலைமாடனை கண்கண்ட தெய்வமாக உயிர்காக்கும் தெய்வமாக வணங்குகின்றனர். கோவில் கொடை என்ற பெயரில் அடிக்கடி சுடலை மாடசாமிக்கு விழா எடுக்கின்றனர்.

இந்த சீவலப்பேரி சுடலைமாடசாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிகம் அந்த அளவு கண்கண்ட தெய்வமாக  அனைவரையும் காத்து நிற்கிறார் சீவலப்பேரி சுடலை.

இந்த கோவிலில் செய்யப்படுகின்ற சத்தியபிரமாணம் சிறப்பு மிக்கதாகும். சீவலப்பேரி சுடலை மீது சத்தியம் என்று சொல்லிவிட்டால் மக்கள் அப்படியே நம்பி விடுவார்கள். பொய்சத்தியம் செய்தால் சுடலைமாட சுவாமி அவர்களை தண்டித்து விடுவார் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.

சுடலை மாடசாமி உக்கிரமான தெய்வம் சுடலை மாடசாமிக்கு ரத்தம் கொடுக்கும் விழாவும் சுவாமி சுடுகாட்டிற்கு சென்று பிணத்தை உண்ணும் விழாவும் இங்கு பிரசித்தம். சோற்றில் விலங்குகள் ரத்தத்தை கலந்து வானத்தை நோக்கி விசுகின்ற திரளை பலி என்ற நிகழ்ச்சியும் இந்த மாடன் கோவிலில்பிரசித்தி பெற்றதாகும்.

மாசானக்கோனார் என்பவருக்கு சுடலைமாடசாமி காட்சி கொடுத்ததன் நிகழ்வாக மாசானக்கோனார் என்பவர் இங்கு கோவில் கட்டினார்.

எப்படிப்பட்ட வம்பு, வழக்கு,துன்பம்,துயரம் என்றாலும் சீவலப்பேரி மாடன் போன்ற துடியான தெய்வத்தை வணங்கினால் இடியென் தன் சக்தியை இறக்கி மக்களின் துயர் போக்குவார் சுடலை மாடன்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.