விருது மழையில் நனையும் ‘சரஸ்‘ மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த குறும்படம்

கமர்ஷியல் படங்களை எடுத்து கல்லா கட்டும் இயக்குநர்களுக்கு மத்தியில் அவ்வப்போது குறிஞ்சி மலராக சில படங்களும் பூக்கின்றன. மாஸ் ஹீரோ, சண்டைக் காட்சிகள், குத்துப் பாட்டு, பஞ்ச் டயலாக் என ரசிகனை திருப்திப்படுத்தும் படங்களே அதிகம் ஹிட் லிஸ்ட்டில் இருக்கின்றன. ஆனால் இவை எதுவுமே இல்லாமல் முழுக்க முழுக்க கதையை மட்டுமே நம்பி அதை சொல்லும் விதத்திலும், கொண்டு போய்ச் சேர்க்கும் விதத்திலும் தனி முத்திரையைப் பதிப்பவை ஆவணப் படங்கள் மற்றும் குறும்படங்கள்.

தற்போதுள்ள பெரும்பாலான திரை நட்சத்திரங்கள் இதுபோன்ற குறும்படங்களிலிருந்தே வந்தவர்கள் தான். லாப நோக்கோடு அல்லாமல் சினிமாவின் தரத்தை உயர்த்தவும், சமூக கருத்துகளைப் பரப்பவும் சில குறும்படங்கள் எடுக்கப்படும். தற்போது அந்தவகையில் எடுக்கப்பட்ட சரஸ் என்ற குறும்படம் உலக சினிமாக்களில் பங்கேற்று விருதுகளை அள்ளிக் கொண்டிருக்கிறது.

ஜுட் பீட்டர் டமியான் என்ற ஆடிட்டர் இயக்கிய ‘சரஸ்‘ குறும்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை அள்ளிவருகிறது. இதுபற்றி இயக்குநர் கூறும்போது, “முதலில் ‘சஷ்தி’ என்ற அரை மணி நேரப் படத்தை இயக்கினேன். இதில் செம்மலர் அன்னம், லிசி ஆண்டனி மற்றும் பலர் நடித்திருந்தனர். கடந்த ஆண்டு 35 சர்வதேச திரைப்பட விழாக்களில் 75-க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளது.

வாரணம் ஆயிரம், விடிவி படத்துல இதையெல்லாம் கவனிச்சுரூக்கிங்களா? கௌதம்மேனன் படத்திலும் குறியீடுகள்

அடுத்து ‘சரஸ்’ என்ற குறும்படத்தை இயக்கினேன்.இதில் நீலிமா ராணி, என்.ஸ்ரீகிருஷ்ணா, வினைதா சிவகுமார், மாஸ்டர் சஞ்சீவ் ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது இந்தப்படமும் திரைப்பட விழாக்களில் 70-க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

சமூக ரீதியாவும், பொருளாதார ரீதியாகவும், பலவீனமான பின்னணி கொண்ட சரஸ் என்ற சரஸ்வதி என்ற ஒரு தாய்  நன்கு படிக்கும் தன் மகனை எவ்வாறு உலகத்தரம் வாய்ந்த பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறாள் என்பதைக் காட்டும் படமாக சரஸ் அமைந்துள்ளது.

சமீபத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான கூழாங்கல் என்ற குறும்படமும் பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை வாரிக் குவித்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...