வேறலெவல் டிரான்ஸ்ஃபர்மேஷன்!.. 2 வாரத்தில் உடல் எடையை அதிரடியாக குறைத்த தனுஷ் பட ஜோடி!..

நடிகை சாரா அலி கான் இரண்டே வாரத்தில் தனது வயிற்றில் உள்ள கொழுப்பை கரைத்து விட்டதாக பதிவிட்டுள்ள போஸ்ட் இந்திய அளவில் வைரலாகி வருகிறது.

பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் மூத்த மகளான சாரா அலி கான் பாலிவுட்டின் இளம் நடிகையாக வலம் வருகிறார். நடிகர் தனுஷ் மற்றும் அக்ஷய் குமார் இணைந்து நடித்த அட்ரங்கி ரே படத்தில் இருவருக்கும் ஜோடியாக நடித்து ஸ்டோர் செய்தார்.

சாரா அலி கானின் சேஞ்ச் ஓவர்

தொடர்ந்து பல பாலிவுட் படங்களில் நடித்து வரும் சாரா அலி கான் எப்போதுமே ஃபிட்னஸை அதிகம் விரும்புபவர். ஆனால் சமீபத்தில் திடீரென பருமன் ஆகிவிட்டதாக வருந்தியவர் மீண்டும் பழையபடி ஸ்லிம் ஃபிட் பாலிவுட் நடிகையாக மாறுவதற்காக கடுமையான உடல் உழைப்பை செலுத்தியதன் பலனாக இரண்டே வாரங்களில் மீண்டும் பழையபடி ஒல்லி இடை அழகுடன் காட்சியளிப்பதாக லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியான கேதார்நாத் படத்தில் சாரா அலி கான் நடிக்கும் போதே ஒரு இஸ்லாமிய பெண் எப்படி இந்து பெண்ணாக அதுவும் இந்துக்களின் புனித தளமான கேதார்நாத்தில் நடிக்கலாம் என பெரும் சர்ச்சைகள் கிளம்பின.

2 வாரங்களில் அதிசயம்

பாலிவுட் நடிகர் சைப் அலி கான் இஸ்லாமியராக இருந்தாலும் அவரது முதல் மனைவி அமிர்தா சிங் இந்துதான் என்றும் அவரது மகளான சாரா அலி கான் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளிட்ட பல இந்துக் கோயில்களுக்கு அடிக்கடி விசிட் அடித்து வரும் புகைப்படங்களையும் பதிவிட்டு தான் இந்து மதத்தையும் இஸ்லாமிய மதத்தையும் பின்பற்றுபவர் என்பதை தெளிவுபடுத்தி உள்ளார்.

28 வயதான சாரா அலி கான் போதைப்பொருள் தொடர்பான வழக்கிலும் விசாரிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அது தொடர்பாக எந்த ஒரு கைது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது கவனிக்க தக்கது.

நடிகைகள் தங்கள் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆவதற்காக கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். சிலர் உடல் எடையை அதிகரித்து விட்டு அனுஷ்கா போல குறைக்க முடியாமல் சிரமப்பட்டு வரும் நிலையில், சட்டென 2 வாரங்களில் சாரா அலி கான் இப்படி ஆளே மாறியிருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews