அடுத்தடுத்து தோல்வி!.. ஆனால், அதுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை.. ஆர்யாவுக்கு பெரிய பில்லாக போட்ட சந்தானம்?..

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வந்த சந்தானம் அறை எண் 305-ல் கடவுள் படத்தில் கதையின் நாயகனாக நடித்தார். அப்போதிருந்தே அவருக்கு இனிமேல் ஹீரோவாகத்தான் நடிக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியது. கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் மீண்டும் லீடு ரோலில் நடிக்க ஆரம்பித்த சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு என ஹீரோவாகவே மாறிவிட்டார்.

சந்தானம் ஹீரோவாக நடித்தாலும் அவருக்கு படங்கள் பெரிதாக இன்று வரை ஓடவில்லை. ஆனால், இடையே ராம்பாலா இயக்கிய தில்லுக்கு துட்டு படங்கள் மட்டும் வசூல் வேட்டை நடத்தின. ஆனால், ராம் பாலாவை விட்டு விட்டு பிரேம் ஆன்ந்த் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்தார். அந்த படம் லாபம் ஈட்டி தந்தது. அதே வேகத்துடன் கடந்த ஆண்டு அடுத்தடுத்து சந்தானம் ரிலீஸ் செய்த கிக் மற்றும் 80ஸ் பில்டப் படங்கள் ஃபிளாப் ஆகின.

ஆர்யா தயாரிப்பில் சந்தானம்:

அடுத்ததாக வரும் பிப்ரவரி 2-ம் தேதி கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், மேகா ஆகாஷ் நடித்த வடக்குப்பட்டி ராமசாமி படம் வெளியாகிறது. பெரியாரை சந்தானம் இழிவுப்படுத்தியதாக எழுந்த சர்ச்சை காரணமாக ரெட் ஜெயன்ட் மூவிஸ் அந்த படத்தை ரிலீஸ் செய்வதில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால், சமீபத்தில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் அந்த சர்ச்சையும் தங்களுக்கு புரமோஷன் தான் என தயாரிப்பாளரிடமே பயப்பட வேண்டாம் எனக் கூறியதாக சந்தானம் பேசியிருந்தார்.

சந்தானம் சம்பளம்:

வடக்குப்பட்டி ராமசாமி படத்தைத் தொடர்ந்து ஆர்யா தயாரிப்பில் டிடி ரிட்டர்ன்ஸ் 2 படத்தில் சந்தானம் நடிக்க உள்ளதாக வடக்குப்பட்டி ராமசாமி ஆடியோ லாஞ்சில் அறிவித்தார். தொடர்ந்து, கிக் மற்றும் 80ஸ் பில்டப் என இரண்டு ஃபிளாப் படங்கள் கொடுத்தாலும் தனது சம்பளத்தை குறைக்காமல் டிடி ரிட்டர்ன்ஸ் படத்திற்காக 8 கோடி ரூபாய் சம்பளத்தை சந்தானம் கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த காரணத்திற்காகவே ஆர்பி செளத்ரி சந்தானம் படத்தை தயாரிக்க வேண்டாம் என விலகி விட்டார் என்றும் தற்போது ஆர்யா சிக்கியிருக்கிறார் என்றும் கூறுகின்றனர். டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் 50 கோடிக்கு மேல் பிசினஸ் செய்யும் என்கிற நம்பிக்கையில் ஆர்யா களத்தில் குதித்து இருக்கிறாராம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews