இசையால் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த சங்கர் மகாதேவன் குழு.. இசைத்துறையின் உயரிய கிராமி விருது பெற்று அசத்தல்!

ஒவ்வொரு துறையிலும் சாதித்தவர்களுக்கு உயரிய விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். திரைப்படங்கள் எப்படி ஒரு ஆஸ்கர்,  புகைப்பட கலைக்கு ஒரு புலிட்சர், கலை அறிவியலுக்கு ஒரு நோபல் என்பது போன்ற விருதுகளுக்கு மத்தியில் இசைத்துறையில் அளப்பறிய சாதனைகளைச் செய்தவர்களுக்கு வழங்கப்படும் விருதுதான் கிராமி விருது. அமெரிக்காவைச் சேர்ந்த National Academy of Recording Arts & Sciences என்ற அமைப்பானது உலகில் இசைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு கடந்த 1951-ம் ஆண்டு முதல் வழங்கி அவர்களை கௌரவித்து வருகிறது.

விளையாட்டுக்கு எப்படி ஓர் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் போல் இசைத்துறைக்கு கிராமி விருது உலக அளவில் மிக அங்கீகாரம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தற்போது 2024-ம் ஆண்டிற்கான கிராமி விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் இந்தியர்களுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக பிரபல பின்னணிப் பாடகரும், இசையமைப்பாளருமான ஷங்கர் மகாதேவன் குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்த ‘சக்தி’ இசைக்குழு மூலமாக சங்கர் மகாதேவன் மற்றும் இசைக் கலைஞர்கள் உருவாக்கிய ஆல்பத்திற்கு  சிறந்த உலகளாவிய இசை ஆல்பத்திற்கான விருது வழங்கப்பட்டது. இந்த இசைக்குழுவின் சமீபத்திய படைப்பான “This Moment”என்ற ஆல்பத்திற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இக்குழுவில் கிதார் கலைஞர் ஜான் மெக்லாக்லின், தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகிர் உசேன், பாடகர் சங்கர் மகாதேவன், தாள கலைஞர் வி செல்வகணேஷ் மற்றும் வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் இவர்களால் உருவாக்கப்பட்ட ஆல்பத்தில் 8 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

shakthi

எம்.ஜி.ஆர் இனி நாடோடி தான் என கிண்டல் செய்தவர்களை மூக்குடைய வைத்த நாடோடி மன்னன்..

இந்த சக்தி இசைக்குழுவானது இந்திய பாரம்பரிய இசையை ஜாஸ் இசையுடன் கலந்த ஒரு அற்புதமாக வழங்கும் ஃப்யூஷன் இசைக்குழு. கடந்த 1973 ஆம் ஆண்டு ஜாஸ் கிதார் கலைஞரான ஜான் மெக்லாக்லின் என்பவரால் கலைநயமிக்க பாரம்பரிய இந்திய இசைக் கலைஞர்களுடன் இணைந்து நிறுவப்பட்டது, இந்த இசைக்குழு மேற்கத்திய மரபுகளுக்கு அப்பால் இசை எல்லைகளை விரிவுபடுத்துவதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

இக்குழுவின் This Moment ஆல்பமானது கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியானது. சக்தி இசைக்குழுவில் இடம்பெற்ற ஒவ்வொரு இசைக்கலைஞர் தங்கள் சொந்த ஊரில் இருந்து தங்கள் பகுதியை ரெக்கார்டிங் செய்து அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கிராமி விருது பெற்ற இந்த இசைகுழுவிற்கும், சங்கர் மகாதேவனுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...