சங்கடங்கள் தீர சங்கடஹர சதுர்த்தியில் இந்த மந்திரம் சொல்லி கணபதியை வணங்குவோம்.


40b6074dfc778cb315db50b446a78fde

கணேச காயத்திரி மந்திரம்:

‘ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
நந்தோ தந்தி ப்ரசோதயாத்’

பொருள்:- முழுமுதற் கடவுளான பரம புருஷனை நாம் அறிவோமாக. வக்ர துண்டன் மீது தியானம் செய்கிறோம். தந்தினாகிய அவன் நம்மை, அனைத்து செயல்களிலும் உடன் இருந்து வெற்றி பெறச் செய்வானாக.

இந்த கணேச காயத்திரி மந்திரத்தை சதுர்த்தி தினத்தில் மட்டுமல்ல தினமுமே பாராயணம் செய்வது நல்ல பலன் கொடுக்கும். தினமும் செய்யப்படும் பூஜையின் முடிவில் கற்பூர தீபம் காட்டும்போது மேற்கண்ட கணேச காயத்திரியை தினமும் 108 முறை சொல்லலாம். இவ்வாறு சொல்வதால் வினைகள் நீங்கும். காரிய தடைகள் அகலும். வெற்றி உண்டாகும். பாவங்கள் விலகும். உடலும், உள்ளமும் வலிமையுடன் திகழும்.

நம்புங்கள்! நல்லதே நடக்கும்!!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews