இதனால் தான் படங்களை இயக்குவதை நிறுத்தி விட்டேன்.. அந்த வலி பெருசு.. சமுத்திரகனி பேட்டி!..

இயக்குநர் மற்றும் நடிகருமான சமுத்திரகனி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் நடிப்பில் யாவரும் வல்லவரே திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இப்படதின் ப்ரோமோஷனை முன்னிட்டு பேட்டி அளித்த சமுத்திரகனி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமுத்திரகனி உன்னை சரணடைந்தேன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதை தொடர்ந்து நெறஞ்ச மனசு, நாடோடிகள், போராளி, நிமிர்ந்து நில், அப்பா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தெலுங்கில் நாலு, ஜண்டா பய் கபிராஜு மற்றும் கன்னடத்தில் யாரெ கோகடலி போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

அதை தொடர்ந்து சமுத்திரகனி பார்த்தாலே பரவசம் படத்தில் சிறிய வேடத்தில் நடித்து நடிகனாக அறிமுகமானார். தமிழில் சுப்ரமணியபுரம் படம் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற சமுத்திரகனி தொடர்ந்து சாட்டை, நீர்ப்பறவை,வேலையில்லா பட்டதாரி, விசாரணை, ரஜினி முருகன் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாளத்தில் தி ரிப்போர்டர், பதிராமனல், டீ கம்பேனி மற்றும் தெலுங்கில் ஆர.ஆர்.ஆர், ஆலா வைகுந்தபுரமுலோ, கிராக் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

மேலும் தற்போது இந்தியன் 2, கேம் சேஞ்சர் படத்திலும் நடித்து வருகிறார். ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கத்தில் சமுத்திரகனி நடிப்பில் யாவரும் வல்லவரே படம் நாளை வெளியாக உள்ளது. அப்படத்தின் ப்ரோமஷனுக்காக பேட்டி ஒன்றில் பேசிய சமுத்திரகனி, ஏன் தற்போது படங்களை இயக்குவதில்லை என்று கேட்டதற்கு, நான் அப்பா படத்தை வெளியிடுவதற்கு பட்டபாடு எனக்கு தான் தெரியும் சின்ன பட்ஜெட் படங்களை ரசிகர்கள் பார்க்க தாயாராக இருக்கிறார்களோ இல்லையோ தியேட்டர் உரிமையாளர்களும், திரைப்பட விநியோகஸ்தர்களும் தயாராக இல்லை.

மேலும் சமீபத்தில் குறைந்த பட்ஜெட்டில் எடுத்து மலையாளத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் தமிழில் நல்ல வரவேற்பையும் பாராட்டுகளையும் பெறுகிறது. என் மகனே நான்கு முறை அந்த படத்தை பார்க்கிறான். அந்த படம் மலையாளத்தில் வசூலித்ததை விட தமிழ்நாட்டில் அதிகமாக வசூலை அள்ளியது.
ஆனால் என் படத்தை வாங்குவதற்கு கூட யாரும் ரெடியாக இல்லை. எனவே நான் எந்த படத்தையும் இயக்குவதாக இல்லை, யாராவது நடிக்க அழைத்தால் மட்டும் நடித்துவிட்டு வருகிறேன் என கடுப்புடன் கூறியுள்ளார்.

அடுத்து மோகன்லால் மகனின் படம் ரீலிஸாக உள்ளது அதை வாங்க பலர் காத்திருக்கின்றனர். ஆனால் என் படமான யாவரும் வல்லவரே படத்தை வாங்க யாரும் தயாராக இல்லை. மேலும், மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை வரவேற்பது போல குறைந்த பட்ஜேட் தமிழ் படங்களையும் வரவேற்றால் நல்ல கதைகள் தொடர்ந்து வரும் என அதிரடியாக பேசியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...