ஒரே மேடையில் முன்னாள் கணவர் நாக சைதன்யாவை சந்தித்த சமந்தா.. பட்டென காலில் விழுந்து.. என்ன ஆச்சு?

உடல் நிலை காரணமாக சில காலம் சினிமாவை விட்டு விலகியிருந்த நடிகை சமந்தா தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று அமேசான் ப்ரைம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சமந்தா மேடையில் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சமந்தா – நாக சைதன்யா சந்திப்பு:

நடிகை சமந்தா மாஸ்கோவின் காவிரி படத்தில் முதலில் நடித்திருந்தாலும், தமிழில் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷனான ஏ மாயா சேசவா படம் சமந்தாவின் முதல் படமாக வெளியானது. விண்ணைதாண்டி வருவாயா படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார் சமந்தா. மேலும் தமிழில் பானா காத்தாடி, நான் ஈ, கத்தி, தெறி, 24 மற்றும் தெலுங்கில் பிருந்தாவனம், தூக்குடு, யெவடு,ஆட்டோநகர் சூர்யா உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். தனது தனிப்பட்ட திறமையினால் இப்போது தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார்.

அதை தொடர்ந்து தெலுங்கில் பிரபல நடிகரான நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை சமந்தா காதலித்து வந்த நிலையில் 2017ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் 2021ம் ஆண்டு இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்திருந்தனர்.

விவாகரத்தை தொடர்ந்து புஷ்பா படத்தில் ”ஊ சொல்றியா மாமா” படலுக்கு நடனமாடிய சமந்தாவிற்கு அமோகமான வரவேற்பு கிடைத்தது. அதை தொடர்ந்து சமந்தாவின் லெவல் உச்சத்திற்கு போகும் என அனைவரும் நினைத்து கொண்டிருக்க மையோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டார். பின்னர் பல சிகிச்சைகளுக்கு பிறகு குணமடைந்த சமந்தா சகுந்தலம், குஷி ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் எதிர்ப்பார்த்த அளவிற்கு அந்த படங்கள் ஓடவில்லை என்பதால் சினிமாவை விட்டு சில காலம் விலகி இருப்பதாக தெரிவித்தார். கமிட்டான படங்களில் இருந்து விலகி தான் பெற்ற பணம் அனைத்தையும் தயாரிப்பாளர்களிடம் ஓப்படைத்தார்.

நடிப்பதை தவிர்த்து வெளிநாடுகள் செல்ல ஆர்வம் செலுத்திய சமந்தாவிற்கு மீண்டும் நோயின் தாக்கம் அதிகரித்துவிட்டது என விமர்சித்து வந்த நிலையில் அவர் தன் முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். மேலும், ராஜ் & டிகே இயக்கத்தில் உருவாகியுள்ள சிட்டாடல் ஹனி பனி வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். அதை தொடர்ந்து தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், நேற்று அமேசான் ப்ரைம் நடத்திய நிகழ்ச்சியில் சமந்தா மற்றும் அவரது முன்னாள் கணவரான நாக சைதன்யா இருவரும் கலந்துக்கொண்டனர். இந்நிலையில் வருண் தவான் இயக்குநர் கரண் ஜோஹர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். அதை பார்த்த சமந்தாவும் அவர் காலில் விழ முயன்ற போது கரண் ஜோஹர், நோ நோ என்று சொல்லி நிருத்தினார். அங்கு நடப்பதை நாக சைதன்யா அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தார். பல நாட்களுக்குப் பிறகு பிரிந்த கணவன் மனைவி ஒரு விழாவில் பங்கேற்றது பேசுபொருளாக மாறியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.