சாதித்துக் காட்டிய சலார்!.. அடேங்கப்பா.. 2 நாட்களில் இத்தனை கோடி வசூலா?.. பிரபாஸ் இஸ் பேக்!

பாகுபலி படத்திற்கு பிறகு பல பிரம்மாண்ட பட்ஜெட் படங்களில் பிரபாஸ் நடித்து வந்தாலும் அந்த படங்களை அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி இரண்டாம் பாகம் வெளியாகி சுமார் 1800 கோடி ரூபாய் வசூல் செய்தது. அதைப் பார்த்த பாலிவுட் தயாரிப்பாளர்கள் பிரபாஸை மும்பைக்கு வரவழைத்து விட வேண்டும் என்கிற முனைப்பு காட்டினர்.

அதன் விளைவாக சாஹோ திரைப்படம் உருவானது. பெரிய பட்ஜெட்டில் வெளியான அந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நாயகியாக நடித்தார். தமிழ் சினிமாவில் இருந்து அருண் விஜய் வில்லனாக நடித்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதன்பிறகு மீண்டும் தெலுங்கில் உருவான ராதேஷ்யாம் படத்தில் கைரேகை நிபுணராக பிரபாஸ் நடித்திருந்தார். பூஜா ஹெக்டே நாயகியாக நடித்த அந்த படமும் ஓடவில்லை.

சலார் 2 நாளில் இத்தனை கோடியா?:

மீண்டும் பாலிவுட்டில் ஓம் ராவத் இயக்கத்தின் ராமாயண கதையை வைத்து ஆதி புருஷன் படத்தை பிரபாஸை வைத்து உருவாக்கினார். இந்த ஆண்டு வெளியான அந்த படமும் சொதப்பியது. இந்நிலையில், பிரசாந்த் நில் படம் பந்தயம் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சொல்லி அடிச்ச கில்லி போல முதல் நாளில் 170 கோடி ரூபாய் வசூல் இரண்டாம் நாளில் 120 கோடி வசூலும் எடுத்து ஒட்டுமொத்தமாக 295.5 கோடி ரூபாய் வசூலை இரண்டு நாட்களில் ஷாருக்கானின் டங்கி படத்துடன் போட்டியிட்ட நிலையிலும் பிரபாஸ் வென்று சாதித்துள்ளார்.

இந்த படத்துக்காக மனைவி, குழந்தைகள் என ஒட்டுமொத்த குடும்பத்தையும் கடந்த நான்கு ஆண்டுகளாக சரியாக சந்திக்கவும் அவர்களுடன் நேரத்தையும் செலவிடவில்லை என கூறிய பிரசாந்த் நில் தான் ஒரு நல்ல கணவரோ, தந்தையோ கிடையாது என்றும் தனது வருத்தத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

பிரபாஸ் இஸ் பேக்:

சலார் படத்தின் மிகப்பெரிய சாம்ராஜ்யம், அம்மா சென்டிமென்ட், இரு நண்பர்களுக்கு இடையேயான கதை, ஹீரோயினை காப்பாற்றுவது, எதிரிகளை துவம்சம் செய்வது, பாபி சிம்ஹா செய்யும் சூழ்ச்சிகள், டார்க் மேக்கிங் என பல விஷயங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளன. அதன் வெளிப்பாடுதான் தற்போது கூட்டம் கூட்டமாக மக்கள் அந்த படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்து வருகின்றனர்.

லியோ, அனிமல், சலார் என தொடர்ந்து படங்களுக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் கொடுக்கப்பட்டாலும் அது எல்லாம் ரசிகர்கள் கண்டு கொள்வதே இல்லை. தங்களுக்குப் பிடித்த நடிகர் படங்கள் வெளியானால் அதை தியேட்டரில் மட்டும் தான் பார்க்க வேண்டும் என்கிற குறிக்கோளுடன் ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.