முதல் சிஎஸ்கே கேப்டன்.. ஐபிஎல் வரலாற்றில் தோனியை முந்தி சரித்திரம் படைத்த ருத்து..

சிஎஸ்கே அணிக்கு வழக்கம் போல மிக நம்பிக்கையான வீரராக இந்த சீசனில் உருவெடுத்துள்ளவர் தான் கேப்டன் ருத்துராஜ். இதுவரை ஆடி முடித்துள்ள பத்து போட்டிகளின் முடிவில் அவர் 509 ரன்கள் எடுத்துள்ள நிலையில் பல போட்டிகளில் மற்ற பேட்ஸ்மேன்களால் ரன் அடிக்க முடியாமல் திணறிய போது கூட தனியாளாக ஆடி ரன் சேர்த்திருந்தார்.

இவரும் ஷிவம் துபேவும் இணைந்து தான் பல போட்டிகளில் சென்னையின் ரன் குவிப்பை அதிகப்படுத்தி இருந்தனர். மற்ற வீரர்கள் தொடர்ச்சியாக ரன் சேர்க்க சிரமப்பட்டாலும் இந்த இரண்டு பேர் களத்தில் நின்றாலே சிஎஸ்கே அணி எளிதாக வெற்றி பெறும் என்ற நிலைதான் இருந்து வந்தது. அப்படி இருக்கையில் தான் சமீபத்தில் பஞ்சாப் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் ஷிவம் துபே முதல் பந்திலேயே அவுட்டாகி வெளியேற ருத்துராஜ் தனியாளாக போராடி இருந்தார்.

அவரும் 62 ரன்கள் சேர்த்து அவுட்டாக பின்னர் யாருமே சிறந்த பங்களிப்பை அளிக்கவில்லை. இந்த சீசனில் இதுவரை களமிறங்கி ஏழு போட்டிகளில் அவுட் ஆகாமல் இருந்ததுடன் மட்டுமில்லாமல் சிக்ஸர்கள் மற்றும் போர்களை பறக்க விட்டிருந்த தோனி, பஞ்சாப் அணிக்கு எதிராக ரன்கள் சேர்க்கவே தடுமாறி இருந்தார். 11 பந்துகளில் ஒரு சிக்சர் மற்றும் ஒரு ஃபோருடன் 14 ரன்கள் மட்டுமே தோனி சேர்க்க, 162 ரன்களில் சிஎஸ்கேவை பஞ்சாப் கட்டுப்படுத்தியிருந்தது.

இதற்கு முக்கிய காரணமாக ராகுல் சாஹர் வீசிய 19 ஆவது ஓவர் அமைந்திருந்த நிலையில், 3 ரன்கள் மட்டுமே அந்த ஓவரில் கொடுத்திருந்தார். பின்னர் ஆடிய பஞ்சாப் அணி எந்தவித நெருக்கடியும் இன்றி பேட்டிங் செய்து வெற்றியையும் எளிதாக பெற்றிருந்தது. சிஎஸ்கே அணியின் தோல்வியால் மீதமுள்ள நான்கு போட்டிகளில் மூன்றிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற ஒரு இக்கட்டான நிலையும் உள்ளது.

சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது ஒரு பக்கம் ரசிகர்களை வாட்டி வதைத்து வந்தாலும் மறுபக்கம் ருத்துராஜ் செய்த முக்கியமான சாதனை ஒன்று ஐபிஎல் வரலாற்றிலேயே மிகப்பெரிய பேசு பொருளாக மாறி உள்ளது. இந்த போட்டியில் 62 ரன்கள் அடித்ததன் மூலம் 509 ரன்களை நடப்பு சீசனில் குவித்துள்ளார் ருத்துராஜ்.

ஆரஞ்ச் கேப்பையும் வென்றுள்ள அவர், சிஎஸ்கே கேப்டனாக 500 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். இதுவரை சிஎஸ்கேவின் கேப்டனாக தோனி இருந்தாலும் மிடில் ஆர்டர் மற்றும் பினிஷர் ரோல் செய்து ஒரு சீசனில் அதிகபட்சமாக 400 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். அப்படி இருக்கையில், ருத்துராஜ் சிஎஸ்கே கேப்டனாக 500 ரன்களைத் தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...