சிவகார்த்திகேயனுக்கேத்த செம ஜோடி!.. அடுத்த ராஷ்மிகாவே இவர் தானா?.. யாரு இந்த ருக்மிணி வசந்த்?..

சிவகார்திகேயன் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வரும் நிலையில் தற்போது கன்னடத்தில் கலக்கி வரும் நடிகையுடன் ஜோடியாக நடிக்க உள்ளார். சிவகார்திகேயனின் அயலான் படம் பொங்கலுக்கு வெளியாகி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் கொண்டாடும் படமாக இருந்தது. அந்த படத்திற்கு போட்டியாக வந்த தனுஷின் கேப்டன் மில்லரையே வசூலில் வீழ்த்தியது. மேலும் கடந்த ஆண்டு வெளியான மாவீரன் திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளியது.

கோலிவுட்டின் முன்னனி நடிகராக இருக்கும் சிவகார்திகேயன் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். இது அவரது உழைப்பிற்கும் விடா முயற்சிக்கும் கிடைத்த பரிசாகும். அவரது கால்சீட்டிற்க்காக பல முன்னணி இயக்குநர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

சிவகார்த்திகேயனின் புதிய ஜோடி:

மேலும், பிப்ரவரி 17ம் தேதி சிவகார்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து முடிக்க உள்ள எஸ்கே21 படத்தின் டைட்டில் டீஸரை பிப்ரவரி 16ம் தேதி வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர். இப்படம் உலக நாயகன் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பிலும், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதை தொடர்ந்து சிவகார்திகேயனின் எஸ்கே23 படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்க உள்ளார். இப்படத்தில் அவர் போலிஸாக நடிக்க உள்ளார். இந்நிலையில் இப்படத்தின் பூஜை நேற்று நடைப்பெற்றது. இப்படத்தில் சிவகார்திகேயனின் ஜோடியாக மிருணாள் தாகூர் நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், தற்போது நடைபெற்ற பூஜையின் போது மிருணாள் தாகூருக்கு பதிலாக ருக்மிணி வசந்த் கமிட்டாகி இருப்பது தெரியவந்துள்ளது.

யாரு இந்த ருக்மிணி வசந்த்:

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கன்னடத்தில் தற்போது முன்னனி நடிகையாக இருக்கும் ருக்மிணி வசந்த் Sapta Sagara Daache ello என்ற கன்னட படத்தின் மூலம் பிரபலமானார். ருக்மிணி இதற்கு முன்னாள் ஆறுமுகம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதியின் 51வது படமான ‘சுத்த பொய்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதை தொடர்ந்து தற்போது எஸ்கே 23 படத்திலும் சிவகார்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் பட பூஜையில் சிவகார்த்திகேயன் அருகே செம க்யூட்டாக ருக்மிணி வசந்த் போஸ் கொடுத்த புகைப்படங்களையும் படக்குழு வெளியிட்டது.

ருக்மிணி வசந்த்தின் தந்தை ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. பார்டரில் உயிர் தியாகம் செய்த அவருக்கு அசோக சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது. சினிமாவில் ஆர்வம் கொண்ட ருக்மிணி வசந்த் தென்னிந்தியாவில் அடுத்த ராஷ்மிகா மந்தனா போல வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயனை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா படத்திலும் நடிக்கப் போகிறார் என்றும் கூறுகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...