தளபதி 69 பட இயக்குநர் ஆர்ஜே பாலாஜியா?.. வைரலாக பரவும் அடுத்த உருட்டு!..

தளபதி விஜய் அரசியல் கட்சி தொடங்கியதும் இன்னும் இரண்டு படங்கள் நடித்துவிட்டு சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய்யின் 69வது படத்தை இயக்கவுள்ள இயக்குநர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சமீபத்தில் அரசியலில் களமிறங்கி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சியில் முழு ஈடுபாடுடன் மக்களுக்காக செயல்பட தன் இத்தனை வருட சினிமா வாழ்க்கையை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. அதற்கு முன்னதாக ரீலிஸான வாரிசு திரைப்படம் 300 கோடி வசூலை ஈட்டினாலும் ரசிகர்களுக்கு பெரிதாக பிடிக்கவில்லை. அதை தொடர்ந்து வந்த லியோ விஜய் ரசிகர்களுக்கு மகிழ்சியை அளித்தது.

தளபதி 69 பட இயக்குநர் ஆர்ஜே பாலாஜியா?:

அதையடுத்து விஜய் தற்போது ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி க்ரேட்டஸ்ட் அஃப் ஆல் டைம் என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா உள்ளிட்ட பல முன்னனி நடிகர்களை வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். மேலும், சமீபத்தில் வெளியான சிங்கப்பூர் சலூன் படத்தில் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக நடித்த மீனாட்சி சவுத்ரி தி கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்தை தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான டிவிவி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்க உள்ளதாக கூறுகின்றனர். மேலும் இத்தனை நாட்களாக கார்த்திக் சுப்புராஜ், வெற்றிமாறன், எச்.வினோத், திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பல முன்னனி இயக்குநர்களின் பெயர்கள் அடிப்பட்டிருத்த நிலையில் தற்போது யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ஆர்ஜே பாலாஜி பெயரும் சேர்ந்துள்ளது.

ஆர்ஜே பாலாஜி மற்றும் என்ஜே சரவணன் இணைந்து நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கியிருந்தனர். அதை தொடர்ந்து வீட்ல விசேஷம் படத்தையும் இயக்கி நடித்திருந்தார். அப்படத்தில் சத்தியராஜ், ஊர்வசி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். அதை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி நடிப்பில் தற்போது வெளியான சிங்கப்பூர் சலூன் திரைப்படம் சுமாராக ஓடியது. மேலும், ஆர்ஜே பாலாஜி விஜய்யிடம் கதை ஒன்றை சொல்லி இருப்பதாகவும் அவரை வைத்து படத்தை இயக்க போவதாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். எனவே, தளபதி 69 படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிகாரப்பூர்வமான அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...