அதிர்ச்சியில் வாயடைத்துப் போன ரஜினி!.. அப்படி ஜெய்சங்கர் என்ன செய்தார் தெரியுமா..?

தமிழ் சினிமாவின் ஜேம்ஸ் பாண்ட் என அழைக்கப்படுபவர் ஜெய்சங்கர். இவரின் சமகால நடிகர்களான ஜெமினி கணேசன் மற்றும் முத்துராமன் ஆகியோருடனும் நடித்து புகழ்பெற்றார். தமிழ் சினிமாவின் சிறு பட்ஜெட் படங்களின் கதாநாயகனாகவும் பல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆஸ்தான நடிகராகவும் காணப்பட்டார்‌. இவரால் எந்த தயாரிப்பாளரும் நஷ்டம் அடைந்ததாக சரித்திரமே கிடையாது. காரணம் இவர் நடிக்கும் படங்களில் எனக்கு இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று ஒருபோதும் கேட்டதே கிடையாதாம்.

முடிந்ததை கொடுங்கள் என்று சொல்லி நடித்து கொடுத்து விடுவாராம். அப்படி இரவும் பகலும் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தார். பின்னர் 80களின் தொடக்கத்தில் ரஜினி மற்றும் கமல் என இரு பெரும் துருவங்கள் தமிழ் சினிமாவை ஆளத் தொடங்கியதால் அதோடு சினிமாவை விட்டு விலகினார். காரணம் அதுவரை 165 படங்களில் கதாநாயகனாக மட்டுமே நடுத்திருந்ததால் வரக்கூடிய கதிராபாத்திரங்கள் அனைத்தும் குணச்சித்திரம் மற்றும் வில்லனாக இருந்ததால் அனைத்தையும் நிராகரித்தார்.

என்னதான் வரக்கூடிய சினிமா வாய்ப்புகள் அனைத்தையும் நிராகரித்து வந்தாலும் சினிமா அவரை விடாது துரத்தி வந்தது. தமிழ் திரைப்பட துறையில் இவருக்கு மிகவும் நெருக்கமான நண்பர் என்று சொன்னால் அது பிரபல தயாரிப்பாளர் ஏ.வி.எம் சரவணன்தான். அவர் ஒற்றை வார்த்தை சொல்லிவிட்டால் அதற்கு மறுப்பே சொல்ல மாட்டாராம். சரவணன் ரஜினியை கதாநாயகனாக வைத்து படம் ஒன்றை எடுக்க திட்டமிடுகிறார். இதற்கு கதை பஞ்சு அருணாச்சலம் எழுதி எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் உருவாக இருந்தது. எல்லாம் கைகூடி வந்த நிலையில் இப்படத்திற்கு வில்லன் யார் என்று பல குழு நீண்ட காலமாக ஆட்கள் தேடி வந்தனர்.

அப்பொழுது இப்படத்தின் எழுத்தாளர் பஞ்சு அருணாச்சலம் வில்லன் கேரக்டருக்கு ஜெய்சங்கர் பொருத்தமாக இருப்பார் என்று கூறியுள்ளார். அதற்கு சரவணன் இதைக் கேட்டதும் ஆச்சரியத்தில் முதலில் மறுப்பு சொல்லி இருக்கிறார். அதற்கு காரணம் அவருடைய தயாரிப்பு நிறுவனத்திலே பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். அதனால் எப்படி இப்போது வில்லனாக நடிக்க கேட்பது என்று தயக்கம் காட்டினார்.‌ பின்னர் ஒரு வழியாக தொலைபேசியில் ஜெய்சங்கரிடம் பேசி படத்தை பற்றி கூறியுள்ளார். இதைக் கேட்டவுடன் ஜெய்சங்கர் சிறிதும் தயகம் இன்றி உடனே படத்தில் வில்லனாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதைப் பற்றி பட குழு ரஜினிகாந்த் இடம் சொன்னபோது முதலில் அவர் மறுத்திருக்கிறார். காரணம் அவர் ஜெய்சங்கரின் மிகப்பெரிய ரசிகனாக இருந்தார். அதனால் என் படத்தில் வில்லன் கேரக்டரில் அவர் நடிப்பதா..? என்று அதிர்ச்சியில் நின்றார். அதன் பிறகு படக்குழு அவரை சமாதானப்படுத்தி படத்தில் நடிக்க வைத்தனர். அந்தப் படம் தான் ”முரட்டுக்காளை”. ரஜினியின் சினிமா வாழ்க்கையில் ஆக்சன் ஹீரோவாக அதிரடியாக மிரட்டி இருப்பார். அப்படம் வெளியாகி வணிக ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. அதன் பிறகு ஜெய்சங்கரும் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews