தியேட்டரில் டிக்கெட் விற்ற நடிகை ராஷி கண்ணா- புது ட்ரெண்ட்

என்னாங்கடா புதுசு புதுசா கிளப்புறிங்கன்னு வடிவேலு சொல்வது போல புது புதுசான வியாபார நுணுக்கங்களை சினிமாக்காரர்கள் செய்து வருகின்றனர்.

860840030eaf066c0c4de256b1313c6e

அந்த வகையில் ராஷி கண்ணாவை தியேட்டர் கவுண்ட்டரில் டிக்கெட் விற்க வைத்துள்ளனர்.

நடிகை ராஷி கண்ணா, இமைக்கா நொடிகள், அடங்க மறு படங்களில் நடித்தவர். தெலுங்கில் சாய் தேஜா, ராஷி கண்ணா நடிப்பில் உருவாகியுள்ள “பிரதி ரோஜு பாண்டேஜ் என்ற  படம்  இன்று வெளியாகிறது.

இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக நடிகை ராஷி கண்ணாவை தியேட்டரில் டிக்கெட் விற்க வைத்து கல்லா கட்டியுள்ளனர் படக்குழு.

ராஷி கண்ணாவும் தனது படத்தின் பிரமோஷனுக்காக ஹைதராபாத்தில் உள்ள பிரபல திரையரங்கில் டிக்கெட் விற்கும் பணியில் இறங்கியுள்ளார்.

ரூம் போட்டு யோசிக்கிறாங்களோ.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews