ராமராஜன் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா

1985ல் வந்த மண்ணுக்கேத்த பொண்ணு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் ராமராஜன். தொடர்ந்து மருதாணி, ஹலோ யார் பேசுறது, உள்ளிட்ட படங்களை இயக்கினார். இருந்தாலும் கங்கை அமரன் இயக்கிய எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன் படங்கள் இவரை உச்சாணிக்கொம்பில் வைத்தன.

49480a616e9ee45d41296ccc742a5f77

80களின் இறுதியில் மிகப்பெரிய நடிகராக வந்த ராமராஜன், 90களின் மத்தியில் விவசாயி மகன், கோபுர தீபம் உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

பின்பு மேதை படம் வரை நடித்தார் 2011 வரை நடித்தார். அதிமுக விசுவாசியான ராமராஜன் கட்சி பிரச்சாரத்துக்காக மதுரை பகுதியில் சென்றிருந்தபோது அவரது வாகனம் விபத்துக்குள்ளானதில் ராமராஜன் அதிகம் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் நீண்ட நாட்களாக அரசியல், சினிமா போன்ற நிகழ்வுகளில் இருந்து விலகி இருந்த ராமராஜன் , மீண்டும் படம் இயக்குவதற்கு ஒரு கதை எழுதி வைத்துள்ளாராம். விஜய் சேதுபதிக்கு ஏற்ற வகையில் கதை எழுதி வைத்துள்ள அவர் அவரிடம் விரைவில் கதை சொல்ல இருக்கிறாராம். இப்படத்தை அவர் இயக்க மட்டுமே இருக்கிறாராம். ஒரு சீனில் கூட தலைகாட்டமாட்டாராம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.