ரஜினியைப் பாட வைக்க மூவர் பட்ட பாடு… அவங்க யார் யாரு… என்ன படம்னு தெரியுமா?

இளையராஜாவைப் பயன்படுத்தி ரஜினிகாந்த் ஒரு பாடலைப் பாடியுள்ளார். இதைப் பயன்படுத்தின்னு சொல்றதை விட பாடாய்படுத்தி என்று சொல்லலாம். அது என்ன பாட்டு என்று பார்க்கலாமா…

அந்தக்காலத்தில் தியாகராஜ பாகவதர் பாடியே பெண்களை மயக்கினாராம். அடுத்து எம்ஜிஆர், சிவாஜி காலம். இவர்களில் யாருமே பாடவில்லை. அடுத்ததாக வந்தவர்கள் கமல், விஜய் வரையும், நகைச்சுவை நடிகர்களில் என்எஸ்.கே., சந்திரபாபுவில் இருந்து மனோரமா, வடிவேலு வரையும் சில குறிப்பிட்ட நடிகர், நடிகைகள் பாடல்களைப் பாடியுள்ளார்கள்.

அதற்கு அவர்களது இனிமையான குரலும் ஒரு காரணம். இவர்களில் ரஜினியை விட்டு விட்டோமே என்று நினைக்கலாம். அவர் ஒரு பாட்டைப் பாடியிருக்கிறார். பாடினார் என்பதை விட படித்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

பி.வாசு இயக்கத்தில் மன்னன் படத்தில் ரஜினிகாந்த் நடித்தார். அந்தக் காலத்தில் கலைஞானத்தின் கதையில் கணவன், மனைவி என்ற பெயரில் ஒரு படம் வெளியானது. இந்தப் படத்தில் ஜெயலிலதா, முத்துராமன் நடித்தனர். அதைப் பட்டி, டிங்கரிங் எல்லாம் பார்த்து எடுத்த படம் தான் மன்னன். ரஜினி, விஜயசாந்தி முக்கிய வேடங்களில் நடித்தனர்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற படம். இதில் வாலி எழுதிய அடிக்குது குளிரு பாடல். இளையராஜா அவருக்கு ஏற்ப ரெண்டு ரெண்டு சொல்லா போட்டு மெட்டு போட்டுருப்பாரு. அதே மாதிரி வாலியும் எளிமையான வார்த்தைகளா போட்டு எழுதியிருப்பாரு. இது முதலிரவுக்கான பாடல்.

காமத்துக்கான பாடல்களுக்கு அதிகம் மெட்டுப் போட்டவர் இளையராஜா தான். ரஜினியுடன் இணைந்து பாடியவர் ஜானகி. ஆரம்பத்தில் இருந்து முடியுற வரை கிளுகிளுப்பு குறையாமல் பாடி அசத்தியிருப்பார்.

இந்தப் பாடலை ரஜினி தான் பாட வேண்டும் என்று வாசு, இளையராஜா, வாலி என அனைவருமே முடிவு பண்ணிவிட்டார்கள். இந்தப் பாடலைப் பாடக்கூட வேண்டாம். படிச்சா போதும். ஆஹா, ஓஹோன்னு இடையில பேசுங்கன்னு சொல்லிட்டாங்க. அதனால் ரஜினியும் சம்மதித்து விட்டார். இந்தப் பாடலில் ரஜினியின் குரல் இரும்பைப் போலவும், ஜானகியின் குரல் தங்கத்தைப் பாலிஷ் பண்ணியதைப் போலவும் இருக்கும்.

Mannan
Mannan

இதுல ஜானகி பல்லவி பாடுவாங்க. அதுக்கு ஆஹா, ஓஹோன்னு சொல்லி இடையில இது எப்படி இருக்குன்னு அவருக்கே உரிய ஸ்டைல்ல சொல்வாரு ரஜினி. முதல் சரணத்தில அள்ளிச் சேர்க்க ஆசை இல்லையோ, ஆடி ரதம் அழைக்குது… கிள்ளிப் பார்க்க எண்ணமில்லையோ… ஆலிலை துடிக்குதுன்னு சொல்வார். அதற்கு ரஜினி ஓஹோன்னு சொல்வார்.

இளையராஜா ரஜினியைப் பாட வைக்க ரொம்பவே சுதந்திரம் கொடுத்தாராம். அதனால் 6 முதல் 8 வரி தான் ரஜினி பாடியிருப்பார். சொன்னால் போதும் 100 மாப்பிள்ளை என்று பாட ஆரம்பித்துக் கடைசியில் அடிக்குது குளிரு…ன்னு பாடுவார்.

 

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...