ரஜினியின் ரகசியத்தை மேடையில் உடைத்த எதிர்நீச்சல் சீரியல் வில்லன்! வாயை பிளக்கும் அப்டேட்!

திரைப்படங்களுக்கு இணையாக தற்போழுது சின்னத்திரைகளிலும் பல சீரியல்கள் மக்கள் மனதை கவர்ந்து வருகிறது. டிவி சீரியல்களுக்கு நம் வீட்டு பெண்கள் அடிமைகள் தான். அந்த அளவிற்கு அதில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் பெயரும், அவர்கள் பேசும் விதம், அணிந்து வரும் ஆடை அணிகலன்கள் என அனைத்தின் மீதும் ஆர்வமாக இருந்து வருவது வழக்கம் தான்.

தற்பொழுது சின்னத்திரைகளில் முன்னணி சிரியலாக வளம் வரும் எதிர்நீச்சல் சீரியல் குறித்து தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு பிரபலமடைந்த இந்த சீரியல் குடும்ப கதையை மையமாக வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்த சீரியலில் வில்லனாக நடித்து வரும் மாரி முத்து அவர்கள் அனைவருக்கும் தெரிந்த பிரபலம் தான். இவர் பல படங்களில் முன்னனி இயக்குனர்களுடன் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். மேலும் சில திரைப்படங்களை இயக்கியுள்ளார். அதை தொடர்ந்து சமீப காலமாக திரைப்படங்களில் எதார்த்தமான குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் இயக்குனர் மாரிமுத்து. இந்த தகவல் தற்போழுது வைரலாகி வருகிறது.

தனது திரை அனுபவங்கள் குறித்த பல்வேறு பேட்டிகளில் பகிர்ந்து கொண்டு வரும் மாரி முத்து, சமீபத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்த பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த போது தனக்கு நேர்ந்த அனுபவங்களை வெளிப்படையாக கூற சில சர்ச்சைகள் வந்தது குறிப்பிடத்தக்கது.

அதை தொடர்ந்து ரஜினிகாந்த் பற்றி இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தை மேடையில் கூறினார். ரஜினி அவர்கள் தற்போழுது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் இயக்குனர் மாரிமுத்து அவர்களும் இணைந்து பணியாற்றுகிறார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் தன்னிடம் பகிர்ந்த சில கருத்துக்களை கூறியுள்ளார். அதில் ரஜினி அவர்கள் சினிமாவில் நடிப்பதற்கு முன்பாக மேடை நாடகம் ஒன்றில் அவர் பீஷ்மர் ஆக நடித்ததாக கூறியுள்ளார்.

முழுக்க முழுக்க ஞானியாக மாறிய வெங்கட் பிரபு! என்ன கொடுமை சார் இது …

அந்த நாடகத்தில் பீஷ்மராக நடிக்க வேண்டிய நபர் வராததால் தன்னை பீஷ்மராக நடிக்க வைக்க மேடையில் ஏற்றியதாக ரஜினி அவர்கள் சொன்னதாக மாரிமுத்து கூறினார். அது மட்டும் இல்லாமல் அப்போது தன்னுடைய வழக்கமான ஸ்டைல் மற்றும் வேகமான நடையுடன் வந்து பீஷ்மர் போல் அமர்ந்து வசனம் பேசியதை பலரும் கைதட்டி ஆரவாரம் செய்து பாராட்டினார் என்று ரஜினிகாந் தன்னிடம் கூறியதாக மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...