ரஜினி பட வில்லன் நடிகர் செந்தாமரையின் ரகசிய காதல் கதை! ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அறிய தகவல்கள்!

பொல்லாதவன், கழுகு, மூன்று முகம் படங்களில் வில்லனாக நடித்த மறைந்த பழம்பெரும் நடிகர் செந்தாமரை பற்றி பலருக்கும் தெரியாத விஷயங்களை அவருடைய மனைவியும், நடிகையுமான கௌசல்யா செந்தாமரை சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் எடுத்து சொல்லி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார்.

1935 ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி கல்யாணராமன் செந்தாமரை காஞ்சிபுரத்தில் பிறந்தவர். இவர் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து போலீஸ் அதிகாரியாகவும், ரவுடியாக முரட்டுத்தனமான கேரக்டர்கள் நடித்து பட்டையை கிளப்பினார். 1957இல் வெளியான மாயாபஜார் படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிற்க்குள் நுழைந்தவர் தான் செந்தாமரை.

எம் ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன் உள்ளிட்ட பழம்பெரும் நடிகர்களுடைய படங்களில் துணை நடிகராகவும், வில்லன் குரூப்பில் ஒருவராகவும், போலீஸ் அதிகாரியாகவும் நடித்து வந்த செந்தாமரை நடிகர் ரஜினிகாந்த் நடித்த பல படங்களில் மிரட்டல் வில்லனாவே மாறியிருந்தார். அதிலும் மூன்று முகம் படத்தில் ஏகாம்பரம் என்ற கதாபாத்திரத்தில் செந்தாமரை நடித்த வில்லத்தனமான நடிப்பை ரசிகர்கள் எப்பவும் மறக்க மாட்டார்கள்.

இந்நிலையில் கணவர் செந்தாமரை குறித்தும் அவர்கள் இருவருக்கும் பழக்கம் எப்படி ஏற்பட்டது, திருமணம் நடக்க யார் காரணம் என்னும் பல விஷயங்களை மனம் திறந்து பேசி உள்ளார் கௌசல்யா செந்தாமரை.

வண்ணாரப்பேட்டையில் பிறந்து வளர்ந்த கௌசல்யா எட்டு வயதிலே முத்தம்மா என்னும் படம் மூலமாக சினிமாவில் நடிக்க தொடங்கினார். ஆனால் அந்த படம் வெளியாகவில்லை. அதற்கு பின் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த கௌசல்யா நாடகங்களில் நடிக்கும் போது அங்கு அதே நாடகத்தில் நடிக்க வந்த செந்தாமரையை பார்த்து அவரின் முரட்டுத்தனமான தோற்றத்தை பார்த்தும் முதலில் சுத்தமாக பிடிக்க வில்லை.

கௌசல்யாவின் குறும்பு தனத்தை பார்த்து செந்தாமரை அடிக்கடி திட்டுவதும் வழக்கம் தான். ஒருமுறை புத்தகம் வாசிக்கும் பழக்கத்தால் கௌசல்யாவிடம் இருந்து ஒரு புத்தகத்தை வாங்கிய செந்தாமரை அதை படித்து விட்டு புத்தகத்தை திருப்பி கொடுக்க கௌசல்யாவின் வீட்டிற்க்கே நேரடியாக சென்றுள்ளார்.

அப்போது அவருக்கு கௌசல்யாவின் பெற்றோர்களால் திட்டு விழுந்துள்ளது. அதன் பின் நாடகம் நடிக்கும் இடத்தில் செந்தாமரையை சந்தித்து புத்தகத்தை வாங்கிய கௌசல்யாவிற்கு செந்தாமரை மீது ஒரு ஈர்ப்பு வந்துள்ளது.

அதன் பின் இருவரும் ஒன்றாக பேசி திருமணத்திற்கு தயாராகினார். காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா தலைமையில் இருவருக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடை பெற்றது. செந்தாமரை இருந்த வரைக்கும் என்ன ஒரு ராணி போல பார்த்துக் கொண்டதாக கௌசல்யா கூறினார்.

இரட்டை வேடத்தில் சிம்பு! மாஸான கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும் சிம்பு 48 படத்தின் அப்டேட்!

சினிமாவில் வில்லனாக நடித்தாலும் தன்னுடைய நிஜ வாழ்க்கையில் அவர் தான் ஹீரோ என கௌசல்யா செந்தாமரை தங்களுடைய காதல் வாழ்க்கையையும், திருமணமான கதையும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். கௌசல்யா தற்பொழுது பூவே பூச்சூடவா, நந்தினி, அழகு, சந்திரலேகா என்னும் பல சீரியலிலும் படங்களிலும் நடித்து வருகிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...