குடும்பத்துடன் ஹோலி கொண்டாடிய ரஜினிகாந்த்!.. சிவாஜிராவ் ரஜினியா மாறியது எப்போ தெரியுமா?

நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் இன்று ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வட இந்தியாவில் அதிகம் பிரபலமான ஹோலி பண்டிகை சென்னையில் மார்வாடிகள் அதிகம் இருக்கும் செளகார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. சமீப காலமாக சினிமா பிரபலங்களும் ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

மராட்டியரான சிவாஜிராவ் கெய்க்வாட் தனது குடும்பத்துடன் ஆண்டுதோறும் ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகிறார். இன்றைய நாளில் இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால் கே. பாலசந்தர் சிவாஜி ராவை ரஜினிகாந்த் என பெயர் வைத்து மாற்றியதே ஒரு ஹோலி பண்டிகை தினத்தில் தான்.

குடும்பத்துடன் ஹோலி கொண்டாடிய ரஜினிகாந்த்:

அதனை கொண்டாடும் விதமாக ரஜினிகாந்த் டே என்றே அவரது குடும்பத்தினர் இந்த நாளை கொண்டாடி வருகின்றனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகன்களுடன் அப்பா ரஜினிகாந்த் ஹோலி கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

செளந்தர்யா ரஜினிகாந்த் அம்மா லதா ரஜினிகாந்த், கணவர் மற்றும் அக்கா ஐஸ்வர்யாவுடன் ஹோலி கொண்டாடிய போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

ஒவ்வொரு வருடமும் இதே போல குடும்பத்துடன் இவர்கள் ஹோலி கொண்டாடி வருகின்றனர். அதன் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

ரஜினிகாந்த் ரசிகர்கள் ரஜினிகாந்த் குடும்பத்துக்கு ஹோலி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஜெயிலர் படத்தின் மூலம் பல வருடங்கள் கழித்து மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்திருந்தார் ரஜினிகாந்த்.

நடிகர் விஜய்யின் லியோ படத்தை விட பல தியேட்டர்களில் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் தான் அதிக வசூலை ஈட்டியதாக அறிவித்து இருந்தனர்.

சொதப்பிய லால் சலாம்:

தமிழ்நாட்டிலும் லியோ படத்தை விட ஜெயிலர் தான் அதிக வசூல் ஈட்டியதாக கூறுகின்றனர். இரு படங்களும் 600 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியதாக கூறுகின்றனர். அதிகாரப்பூர்வமாக 2 படங்களும் 500 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்த ஆண்டு தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் முதன் முறையாக ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் திரைப்படம் வெளியானது. அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் தோல்வியை தழுவிய்து.

அதற்கு அப்பா ரஜினிகாந்த் நடித்தது தான் காரணம் என்றும் படத்தின் பல காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் தொலைந்து போய் விட்டது என்று கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாத இயக்குநராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியது ரசிகர்களை அப்செட் ஆக்கியது.

லால் சலாம் திரைப்படம் இதுவரை ஓடிடியில் வெளியாகவில்லை. அதிக தொகைக்கு அந்த படத்தை விற்பனை செய்ய லைகா நிறுவனம் அடம்பிடித்து வருவது தான் காரணம் என்கின்றனர்.

வேட்டையன் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தை போலவே இந்த படத்தையும் மல்டி ஸ்டார் படமாக நம்பி உருவாக்கி வருகிறார். அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள அந்த திரைப்படம் இன்னும் சில மாதங்களில் படப்பிடிப்பு முடியும் என்றும் தீபாவளிக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் மாதம் முதல் தலைவர் 171 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் அதற்கான ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் சில மாதங்கள் நடைபெறும் என்றும் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...